மேலும் அறிய

காவிரி ஆற்றில் 33 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த தண்ணீர் - ஒகேனக்கலில் மூன்றாவது நாளாக பரிசல் இயக்க தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 21000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 33,000 கன அடியாக அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு.

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி அணையில் வினாடிக்கு 60,000 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 650 கன அடியாகவும், கிளை நதியான நுகு அணையில் இருந்து 5000 கன அடி என மொத்தம் 65,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதனால் காவிரி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று காலை முதல் நீர்வரத்து  வினாடிக்கு 20000, 21,000 கன அடி என படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 33,000 கன அடியாக அதிகரித்ததுள்ளது.

மேலும் இந்த நீர் வரத்து அதிகரிப்பால் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக தண்ணீரின்றி வறண்டு கிடந்த ஒகேனக்கல்லில், பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை தண்ணீரில் மூழ்கி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்தருவி தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.

அதேபோல் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்று பக்கம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 56,500 கனடியில் இருந்து 65,500 கன அடியாக அதிகரித்து இருப்பதால், இந்த தண்ணீர் நாளை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும்.  

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநில வயநாடு பகுதியில், இன்று அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதால், ஆரஞ் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது‌. 

மேலும் ஜூலை 21 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.  

இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு, மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget