மேலும் அறிய
Advertisement
தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய மகள் - கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்
தந்தை இறந்த நிலையிலும் மாணவி 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவியின் செயல்
நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அடுத்த சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தினவடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவர் நேற்று அதிகாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த ரத்தின வடிவேலுக்கு ராஜேஸ்வரி (16) என்ற மகள் உள்ளார். இவர் கடலூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
தந்தை இறப்பு
இந்த நிலையில், நேற்று 12ம் வகுப்பு இயற்பியல் பொது தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தந்தை இறந்ததால் மிகவும் துயரம் அடைந்த மாணவி கதறி அழுதார். இருப்பினும் நேற்று காலை இயற்பியல் தேர்வு எழுதுவதற்காக அவர் பள்ளிக்கு வந்தார். இதை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அவருக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதையடுத்து ராஜேஸ்வரி தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். தந்தை இறந்த நிலையிலும் மாணவி 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion