Biriyani: இறந்த கோழியை கொண்டு பிரியாணி செய்யப்படுகிறதா? சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்
தமிழகத்தில் புற்றீசல்போல அதிகரிக்கும் பிரியாணி கடைகள் அதிகாரிகள் ஆய்வு அவசியம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் சமீப காலமாக பிரியாணி கடைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துள்ளனர்.
தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் தினசரி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு அருந்துகின்றனர். இதில் 20% ஹோட்டல்கள் சைவம், அசைவம் என்று ஒரு சில ஹோட்டல்கள் முழுநேர அசைவ ஹோட்டல்களாகவும் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் நகர்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில்தான் அசைவ ஓட்டல்களை காண முடியும். சமீப காலமாக தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் பிரியாணி கடைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, குஸ்கா, கிரில் சிக்கன் சில்லி சிக்கன் என பல வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தவிர முட்டை குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு என விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற கடைகளில் இறைச்சி சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. சமீப காலமாக நாமக்கல், திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகளும் அதிகரித்து வருகிறது.
இந்த கறிக்கோழி பண்ணைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு பல லட்சம் கோடிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகாவுக்கும் செல்கிறது. கறிக்கோழி பண்ணைகள் அதிகரிப்பு ஒரு பக்கம் அதற்கு ஏற்ப சிக்கன் கடைகள் சில்லி சிக்கன் கடைகள், பிரியாணி கடைகள் என ஒவ்வொரு நாளும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஆனால் இதன் எதிரொலியாக மக்களுக்கு பல நோய்கள் எளிதில் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் எங்காவது ஓரிடத்தில் நாட்டுக்கோழி கடைகள் இருக்கும். அந்த கடைகள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமும் புதன்கிழமைகளில் அரை நாளும் செயல்படும்.
பொதுமக்கள் நாட்டுக்கோழி வாங்கி வீட்டில் சமைப்பார்கள் சமீப காலமாக சிக்கன் கடைகளில் சில்லி சிக்கன், கடை பிரியாணி கடைகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு அடி தூரத்துக்கு ஒரு சிக்கன் கடை உள்ளது. இவ்வாறு சிக்கன் கடைகளின் வருகையால் மக்களுக்கு சீக்கிரம் நோயும் தொற்றிக் கொள்கிறது. கறிக்கோழி விரைவில் பெரியதாக வளர அதற்கு ரசாயன ஊசி செலுத்தப்படுகிறது.
இதன் காரணமாக குறிப்பிட்ட நாளில் கறிக்கோழிகள் விற்பனைக்கு ரெடி ஆகிறது. ஆனால் நாட்டுக்கோழி அப்படி இல்லை அவை வளர மாதக்கணக் ஆகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டில் மட்டும் தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கில் புதியதாக பிரியாணி கடைகள் முளைத்துள்ளன.
இது போன்ற கடைகளில் உயிருள்ள கறிக்கோழிகள் தான் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி பரவலாக உள்ளது. கோழி பண்ணைகளில் இறந்த கோழிகளைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது.
எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல் பிரியாணி கடைகளில் புதிய ஆய்வு செய்ய வேண்டும் எவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்