மேலும் அறிய

கோடநாடு வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் மகன் செந்தில்குமாரிடம் இரண்டாவது நாளாக விசாரணை!

அதிமுக ஆட்சிக்காலத்தில் காவேரி ஆற்றுப் படுகையில் மணல் ஒப்பந்தங்களை ஓ.ஆறுமுகசாமி செய்து வந்தார். இவரது மகன் செந்தில்குமார், செந்தில் பேப்பர்ஸ் மற்றும் போர்ட்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 250 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோடநாடு வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் மகன் செந்தில்குமாரிடம் இரண்டாவது நாளாக விசாரணை!

இதனிடையே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது உதவியாளர் நாரயணசாமி, மகன் அசோக்குமார், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர்கள் சிபி, சுனில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிய கண்ணன் ஆகியோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்

இந்நிலையில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் தனிப்படை காவல் துறையினர் தொழிலதிபர் செந்தில்குமாரிடம் நேற்று விசாரணை நடத்தினர். மணல் ஒப்பந்ததாரர் ஓ. ஆறுமுகசாமியின் மகனான இவர், செந்தில் பேப்பர்ஸ் மற்றும் போர்ட்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் காவேரி ஆற்றுப் படுகையில் மணல் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்த ஓ.ஆறுமுகசாமி, சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமானவராக அறியப்பட்டார்.

இதனிடையே கடந்த 2017 ம் ஆண்டு செந்தில் பேப்பர்ஸ் மற்றும் போர்ட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் உள்ள ஷைலி நிவாஸ் என்ற அபார்மெண்டில் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். கோடநாடு தொடர்பான வருமான வரித்துறை ஆவணங்களை கேட்டு பெற்ற தனிப்படை காவல் துறையினர், கோடநாடு நிர்வாகத்திற்கும், செந்திலின் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிந்தனர். இதன் அடிப்படையில் சம்மன் அனுப்பிய தனிப்படை காவல் துறையினர் கோடநாடு எஸ்டேட் தொடர்பாக செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக செந்தில்குமாரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
அறிமுகமாகியது 2026 Maruti Brezza! எந்த வேரியண்ட் எவ்வளவு விலை? பேஸ் டூ டாப் - முழு அலசல்
அறிமுகமாகியது 2026 Maruti Brezza! எந்த வேரியண்ட் எவ்வளவு விலை? பேஸ் டூ டாப் - முழு அலசல்
Embed widget