மேலும் அறிய

Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு

மழை வருவதற்கு முன்பே தனது காலை நிலத்தில் பதிக்கக்கூடிய முதல்வரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது - சேகர்பாபு

மருத்துவ முகாம் தொடக்கம்: 

தி.ரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி மங்களபுரம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து தி.ரு.வி.க. நகர், பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர் பாபு

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அரசு தயார் நிலையில் இருந்ததால் வெள்ள பாதிப்பை நிர்வாக திறமையோடு வெற்றிக் கொண்ட அரசாக இன்றைய அரசு உள்ளதாக நடுநிலையாளர்களும் பொதுமக்களும் பாராட்டுகின்றனர். ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுகின்ற பணியை மேலும் விரைவு படுத்தப்பட்டுள்ளது முதலமைச்சர் அனைத்து மாவட்ட அமைச்சர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் மழை வெள்ளப் பணிகளை செய்ய கூறியுள்ளார்.

போக்குவரத்து தடை இல்லை:

தொடர்ந்து பேசிய அவர் , இங்கு இருந்து 325 hp திறன் கொண்ட மோட்டார் மூலம் தண்ணீர் பக்கிம் கால்வாய்வாக்கு வெளியேற்றப்படுகிறது. ஆதித்திறன் கொண்ட 600 hp கொண்ட மின் மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட பெய்த பெரும் மழையின் பொழுது இங்கு முதலமைச்சர் ஆய்வு செய்தார். சுமார் 19 கோடி ரூபாய் செலவில் இந்த மழை நின்றவுடன் பணிகள் துவக்கப்பட்டு அடுத்த பருவமழைக்கு தண்ணீர் தேங்காத சூழ்நிலையை நிச்சயம் ஏற்படுத்தி தருவோம். நிரந்தர தீர்வு அடுத்த பருவ மழைக்குள் ஏற்படும்

எங்கெல்லாம் அவய குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் ஆதரவு குரல் நீட்ட முதல்வராக முதலமைச்சர் களத்தில் உள்ளார். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வற்றி விடும். கடந்த காலங்களில் 13 சென்டிமீட்டர் என்ற அளவிற்கு மழை பெய்தாலும் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் வெளியேறாத நிலைமை இருந்தது முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்பொழுது அந்த நிலைமை முற்றிலமாக மாறி உள்ளது முக்கிய சாலைகள் முழுவதுமாக பயன்பாட்டில் உள்ளது எங்கும் போக்குவரத்திற்கு தடை இல்லை.

3 மணி நேரத்திற்குள் தண்ணீர் வெளியேற்றம்

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறது, அம்மா உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது, தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய தண்ணீர் இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் தேங்கும் இடத்திற்கு நான் முதலமைச்சரை அழைத்து செல்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர்.

டெல்டா பகுதிகளின் ஏற்பட்ட பெரும் வெள்ள பாதிப்பின் பொழுது வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி, எந்தவிதமான மழை நிவாரண பணிக்கும் செல்லாதவர் இரண்டு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர் கூட இங்கு அடையவில்லை. மழை வருவதற்கு முன்பே தனது காலை நிலத்தில் பதிக்கக்கூடிய முதல்வர்   அவரை அழைக்க ஜெயக்குமாருக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா.

சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் ராயபுரம் திருவிக நகர் கொளத்தூர் இந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நெடுஞ்சாலை துறை சார்பில் கூடுதலாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது அந்தப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கொசஸ்தலை மற்றும்  கோவளம் ஆறுகளில் நடைபெற்ற வரும் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் மாதத்தில் முடிவடையும் என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
நண்பனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு !! கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை
நண்பனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு !! கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
Diesel Hatchback: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Onam festival Special Train : 100 சிறப்பு ரயில்.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு குஷி- எங்கிருந்து எங்கே.? ரயில்வே அமைச்சர் அதிரடி
100 சிறப்பு ரயில்.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு குஷி- எங்கிருந்து எங்கே.? ரயில்வே அமைச்சர் அதிரடி
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Embed widget