சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே உள்ள சித்தலப்பாக்கம் அடுத்துள்ள சங்கராபுரம் 1 ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர், அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் விலங்கு பிரியர் என்பதால் இவர் வீட்டில் நாட்டு நாய் ஒன்றை  சிக்குக் என பெயர் வைத்து வளர்த்து வருகிறார்.  இந்நிலையில் இம்மாதம் 7 ஆம் தேதி காலை நாய் உடலில் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளது. இரும்பு போன்ற ஆயுதத்தால் குத்தி ஏறுபோல் இருந்ததால் ஏதாவது கம்பியில் குத்தி கிழித்து இருக்கலாம் என ஸ்ரீதர் சிறிய அளவில் மருத்துவ உதவிகளை செய்துவிட்டு தனது வழக்கமான பணிக்கு சென்று உள்ளார்.




பின்னர் வேலை முடிந்து மாலை தனது நாயை பார்க்க வந்த பொழுது நாயின் உடலில் ரத்தம் நிற்காமல்,  வந்தால் ஸ்ரீதர் உடனடியாக அந்த நாயை மீட்டு அருகில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். ரத்தம் நிற்காமல் வந்ததால் உள்ளே காயம் ஏதேனும் உள்ளதா என்பதை பரிசோதிக்க ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று நாய்க்கு ரத்தம் வந்த இடத்தை ஸ்கேன் எடுத்துள்ளனர். 




ஸ்கேன் ரிசல்ட்டில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் சிரிய ரக துப்பாக்கியில் குண்டு இருந்ததை கண்டு மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வேளச்சேரியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில்  நாய்க்கு அருவை சிகிச்சை செய்து உடலில் இருந்த தோட்டாவை வெளியே எடுத்து தையலும் போட்டுள்ளனர். இதையடுத்து ஸ்ரீதர் நேற்று தனது நாய் காலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டா குறித்து,  சென்னை பெரும்பாக்கம் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார். துப்பாக்கியால் சுட்டவர் யார் என்ற கோணத்தில் தற்போது பெரும்பாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நாயின் உரிமையாளர் ஸ்ரீதர் கூறுகையில், யார் இவ்வாறு செய்தார்கள் என தெரியவில்லை உடனடியாக காவல்துறையினர் நாய் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர