சென்னை சாஸ்திரி பவனில் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு கருத்தரங்கை தொடங்கி வைத்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். அப்பொழுது பேசிய அவர், மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து தினமுமே பெண்களுக்கான தினம் என்பதால், அணைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்றார். பெண்ணுரிமையை நாம் தவறாக பயன்படுத்துகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவது தான் பெண்ணுரிமை என நினைக்கிறார்கள். 


ஆனால், நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் உள்ளது. பெண்கள்  உடையில் ஒரு கட்டுபாடு இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 


மற்ற மாநிலங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், தமிழகத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வளவு தடைகள் போட்டாலும், அதனை உடைத்து எறிந்து மேலே வர வேண்டும் என்பது தான் என்னோடு விருப்பம். பெண்களுக்கு சம உரிமை கிடைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.


ஆண்களுக்கு கட்டுப்பாடு என்பது வீட்டில் வைப்பது இல்லை. பெண்களுக்கு மட்டுமே வீட்டிற்கு சீக்கிரம் வர வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இருக்கின்றனர். ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தால் தான் பெண்களிடம் அவர்கள் சரியாக நடந்து கொள்வார்கள் என்று கூறிய அவர், பெண்ணுரிமை எது என்று நாம் நினைப்பதில் தான் பிரச்னை ஏற்படுகிறது. நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் வேண்டும் மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உடை அணிய கூடாது. உடையில் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டும்.


நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று செய்வதற்கு சுதந்திரம் இருக்கிறது என்பது போல், மற்றவர்களுக்கும் அதே சுதந்திரம் உள்ளது என்பதை உணரவேண்டும். நல்லா படிப்பேன், சாதனை செய்வேன், மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை.


பெண்களின் பாதை எப்போதும் மலராக இருக்காது, கல்லும் முள்ளும் உள்ள பாதையாக தான் இருக்கும். அதை தான் கோட்டையை அடையும் எண்ணத்தை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும். பெண்கள் ஒரு இரும்பு போன்றவர்கள் என பேசினார். 


எவ்வளவு பிரச்சினை வந்தாலும் தற்கொலை தீர்வு என்பது தீர்வல்ல, பெண்கள் அதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க கூடாது என்றும் வீடுகள் தான் பாதுகாப்பு என்று நினைத்து கொண்டிருந்த சூழ்நிலையில், வீட்டிலும் பாதுகாப்பு இல்லை என்கிற உணர்வை புரிய வைத்தது இந்த கொரோனா காலம்.


நம் வீட்டிலும், பக்கத்து வீட்டிலும் வைரஸை விட ஆபத்தானவர்கள் உள்ளனர். அதற்காகவே பள்ளிகளை சீக்கிரம் திறக்க வேண்டும் என்கிற முடிவை அரசுகள் எடுத்துள்ளதாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன்  ஒரு ஆண் கையில் இருக்கும் பணத்தை விட, பெண் கையில் பணம் இருந்தால் அந்த வீடே பயன்பெறும் எனவும், ஆண்கள் பெண்களை மதிக்க கற்று கொள்ளுங்கள் 


இனி வரும் காலங்களில் பாலியல் தற்கொலைகள், தொந்தரவுகள் வரக்கூடாது எனவும் உஜ்வாலா போன்ற திட்டங்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, சம உரிமையை பெற வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறது எனவும் பெண்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி கூறும் வகையில் அமைப்புகள் இருக்க வேண்டும். என்னிடம் உதவி கேட்டு வரும் பெண்களுக்கு எப்போதும் என்னுடைய அலுவலக கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என திருமதி தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண