நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டபோது பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடுமையான உயிரிழப்பை இந்தியா சந்தித்தது. அந்த தருணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் தங்களது தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு செயல்களில் கவனம் செலுத்தினர். அந்த சமயத்தில், சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவரும் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
எழுத்தாளர், சமூக ஆர்வலர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற பன்முகத்திறன் கொண்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி கொரோனாவில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, கொரோனாவில் இருந்து மீண்டு வர அமெரிக்க – இந்திய கூட்டு முயற்சியில் இந்தியன் மிஸஸ் சர்வதேச கிளாசிக் அழகிப்போட்டியில் பங்கேற்றார்.
சுமார் 3 ஆயிரம் நபர்கள் விண்ணப்பித்த இந்த போட்டிக்கு 52 பேர் மட்டுமே தேர்வானர்கள். அவர்களில் தமிழ்நாட்டில் இருந்து “மிஸஸ் இந்தியா” போட்டிக்கு நளினி மட்டுமே தேர்வானார். நளினியின் சிறப்பான செயல்பாடு காரணமாக அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவர் பங்கேற்று, மிஸஸ் இந்தியா என்ற பட்டத்தையும் கைப்பற்றினார். இதே போட்டியில் கிளாமரஸ் அச்சிவர் என்ற பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைவரும் மாடலிங் துறையில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றவர்கள். நளினி மட்டுமே இந்த துறைக்கு மிகவும் புதியவர். ஆனாலும், தனது தன்னம்பிக்கையாலும், ஊக்கமான பேச்சாலும், தனித்திறனாலும் அவர் இந்த பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் பிளாரன்ஸ் ஹெலன் நளினி அமெரிக்காவின் மியாமி நகரில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சர்வதேச அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். கொரோனாவில் இருந்து மீள்வதற்காக அழகிப்போட்டியில் பங்கேற்று பட்டம் வென்ற மருத்துவர் நளினிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க..
Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!
Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...
“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்