News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Lunch Box Recipe : லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.. வெற்றிலை வள்ளிக்கிழங்கு கூட்டு.. இப்படி செய்தால் சூப்பரா இருக்கும்...

சுவையான வெற்றிலை வள்ளிக்கிழங்கு கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

காய்கறி, பழங்கள், கிழங்கு வகைகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியவை. இதை நம் உணவில் சரிவர சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். கிராமப்புறங்களில் பெரும்பாலானோரின் வீடுகளில் வெற்றிலை வள்ளிக்கிழங்கை வளர்க்கின்றனர்.  

தேவையான பொருட்கள்

3/4 கிலோ வெற்றிலை வள்ளி கிழங்கு, 1/2 மூடி தேங்காய், 3 பச்சை மிளகாய், வர மிளகாய், 1ஸ்பூன் சீரகம், 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள், கறிவேப்பிலை 1 கொத்து, உப்பு தேவையான அளவு. 

செய்முறை 

வெற்றிலை வள்ளி கிழங்கின் தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 

வெத்தல வள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். 

இது ஓரளவு வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் வேகவைத்து கொள்ளலாம்.

ஒரு மிக்ஸியில் தேங்காய் துருவல், வர மிளகாய், சீரகம் சேர்த்து  சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

அரைத்த விழுதை வேக வைத்த கிழங்குடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த வெத்தலவள்ளிக்கிழங்கில் உள்ள பசை தன்மை காரணமாக கிழங்குடன் அரைத்த விழுதுகள் நன்கு ஓட்டிக்கொள்ளும்.

இதன் மீது கறிவேப்பிலையை நறுக்கி சேர்த்து அதன் மீது சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அனைத்து விடலாம்.  

இது சாதத்துடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் 

வெற்றிலை வள்ளிக்கிழங்கின் பயன்கள் 

வெற்றிலை வள்ளிக்கிழங்கில், நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் சர்க்கரை, புரதங்கள், லிப்பிடுகள், வைட்டமின்கள், தாதுக்கள், ஃபிளாவனாய்டு போன்றவை உள்ளன. மேலும் இது டானின், சபோனின் மற்றும் மொத்த பீனால்கள் உட்பட அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட ஒரு சிறந்த உணவுப்பொருள்.

 வள்ளி கிழங்கு வகைகள் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை. 

Published at : 10 Mar 2024 11:57 AM (IST) Tags: vetrilai vallikkizhangu kootu vetrilai vallikkizhangu benefits healthy side dish recipe

தொடர்புடைய செய்திகள்

Kaara Kozhukattai :கார கொழுக்கட்டை : ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக் ரெசிபி செய்முறை!

Kaara Kozhukattai :கார கொழுக்கட்டை : ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக் ரெசிபி செய்முறை!

Green Peas Rice : பிரியாணியை மிஞ்சும் சுவையில் பச்சை பட்டாணி சாதம்.. செய்முறை இதோ..

Green Peas Rice : பிரியாணியை மிஞ்சும் சுவையில் பச்சை பட்டாணி சாதம்.. செய்முறை இதோ..

Banana Poli: அடிபோலி! வாழைப்பத்தில் சூப்பர் சுவையில் போளி செய்வது எப்படி?

Banana Poli: அடிபோலி! வாழைப்பத்தில் சூப்பர் சுவையில் போளி செய்வது எப்படி?

Vermicelli Sweet: சேமியா ஸ்வீட்! குறைந்த பொருட்களை வைத்து வீட்டிலே செய்யலாமா?

Vermicelli Sweet: சேமியா ஸ்வீட்! குறைந்த பொருட்களை வைத்து வீட்டிலே செய்யலாமா?

Orange Ice Cream: கெமிக்கல் இல்லாத டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் க்ரீம்! வீட்டிலே செய்வது எப்படி?

Orange Ice Cream: கெமிக்கல் இல்லாத டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் க்ரீம்! வீட்டிலே செய்வது எப்படி?

டாப் நியூஸ்

Arvind Kejriwal Timeline: அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!

Arvind Kejriwal Timeline: அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!

Breaking News LIVE: வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டு : மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

Breaking News LIVE: வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டு : மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!

Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!

TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?

TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?