News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Betel Laddu : ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வெற்றிலை லட்டுகள்.. செய்முறை இதோ...

சுவையான வெற்றிலை லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

தேவையான பொருட்கள்

வெற்றிலை-3

மில்க்மேய்ட்-50 கிராம்

தேங்காய் துருவல்- ஒரு கப்

டூட்டிபுரூட்டி- 4 ஸ்பூன்

குல்கந்து- 4 ஸ்பூன்

நெய்- தேவையான அளவு

செய்முறை 

முதலில் வெற்றிலையின் காம்புகளை நீக்கி, பின் துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதில் மில்க்மேய்டை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து வதக்க  வேண்டும்.

பிறகு வதங்கிக்கொண்டிருக்கும் தேங்காய் துருவலில் அரைத்து வைத்த வெற்றிலை கலவையையும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். 

இதை ஒட்டும் பதத்திற்கு விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் இந்த கலவையை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் டூட்டிபுரூட்டி மற்றும் குல்குந்து சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும். பின் இக்கலவையை  உருண்டையாக உருட்டி நடுவில் குல்குந்து கலவையை வைத்து நன்றாக மூடி லட்டாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 

அவ்வளவுதான் சுவையான வெற்றிலை லட்டு தயார். 

வெற்றிலையின் பயன்கள் 

வெற்றிலை நம்முடைய முடியை பலப்படுத்தும். மேலும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய வெற்றிலை உதவலாம்.

வெற்றிலையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களை நீக்க உதவியாக இருக்கும்.

எனவே பருக்கள் மீது அரைத்த வெற்றிலையை பூசி வந்தால் பருக்கள் மறையும் என சொல்லப்படுகிறது.

வெற்றிலை சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் முகம் கழுவினாலும் பருக்கள் மறையும் என்று கூறப்படுகிறது.

சருமத்தில் அலர்ஜி இருந்தால் வெற்றிலை உதவும். தோலில் அரிப்பு, சொறி மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் வெற்றிலை சேர்த்து கொதித்த நீரில் குளிக்கலாம்.

இந்த தண்ணீரில் நாள்தோறும் குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 

சிலருக்கு உடலில் அதிகப்படியான துர்நாற்றம் வீசும், அப்படிப்பட்டவர்கள் வெற்றிலை எண்ணெய் அல்லது வெற்றிலை சாறு கலந்து குளித்து வந்தால் இந்த பிரச்சனை சரியாகும் என சொல்லப்படுகிறது.

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் வெற்றிலை பயன்படும் என்று சொல்லப்படுகின்றது. 

Published at : 10 Mar 2024 12:05 PM (IST) Tags: tasty betel laddu betel laddu procedure betel benefits

தொடர்புடைய செய்திகள்

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

Dal Recipe:சப்பாத்திக்கு சூப்பர் காம்போ- பருப்பு மசியல் செய்முறை இதோ!

Dal Recipe:சப்பாத்திக்கு சூப்பர் காம்போ- பருப்பு மசியல் செய்முறை இதோ!

டாப் நியூஸ்

GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!

GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!

Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?

Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?

GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!

GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!

"பயில்வான் ரங்கநாதன் - ஷகிலா மோதல் விவகாரம்" அஜர்பைஜான் தூதர் ஆதங்கத்துடன் சொன்ன அறிவுரை!