News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Hair Care : குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு பொலிவிழந்து போகிறதா? இந்த டிப்ஸை பின்பற்றுங்க... முடி பொலிவா இருக்கும்...

குளிர்காலத்தில், கூந்தல் வறண்டு பொலிவிழப்பதை தடுக்க ஒரு சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

குளிர் காலத்தில் நம் முடியை கவனிக்காமல் இருப்பதால், நமது தோல் மற்றும் முடி ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு முடி வறண்டு போகலாம். குளிர்காலம் நெருங்கும்போது, ​​நம் தலைமுடி வறண்டு, அதன் பொலிவை இழந்துவிடும். ஆனால் இதை நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.இதற்கு தீர்வுகளும் உள்ளன.

குளிர்காலத்தில் நிலவும் வறண்ட வானிலை நேரடியாக நம் கூந்தலை பாதிக்கிறது. நம் தலைமுடிக்கு இயற்கையான லூப்ரிகேஷன் இல்லை மற்றும் ஊட்டமளிக்க அதன் வேர்களில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்களை பெரிதும் நம்பியுள்ளது. குளிர்காலத்தில் நம் உடல் வறண்டு விடுவதால், உச்சந்தலையில் சேமித்து வைத்திருக்கும் எண்ணெயை முழுவதுமாக பயன்படுத்துகிறது. இதனால் கூந்தல் வறண்டு, உடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உச்சந்தலையில் பொடுகு உற்பத்திக்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

முடியை குளிர்காலத்தில் இந்த மாதிரியான பாதிப்பில் இருந்து பாதுகாக்க கடைபிடிக்கவேண்டிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம். 

கூந்தல் வறண்டுபோதலை தடுக்க 4 உணவுக்குறிப்புகள்

கூந்தல் பராமரிப்பு பற்றி பேசும்போது உடனடியாக நம் நினைவுக்கு வருவது ஹேர் பேக்தான். உங்கள் தலைமுடியை ஈரப்பதமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உங்கள் உணவில் சில அடிப்படை மாற்றங்களைச் செய்யவேண்டியது அவசியம். 

1. சீரான அளவில் தண்ணீர் குடிக்கவேண்டும்

குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். உடல் நீரேற்றமாக இருக்கவும், செல்கள் மற்றும் திசுக்களில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்  நீர் சமநிலையை பராமரிப்பது முக்கியம்.

2. பருவகால உணவுப் பொருட்களை உட்கொள்ளவும்

பருவகால உணவுப் பொருட்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நமக்கு ஊட்டமளிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் உங்கள் தல்லைமுடிக்கும் நன்மை பயக்கும் என சொல்லப்படுகிறது. தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழிகளில் ஒன்று பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சரியான உணவைப் பின்பற்றுவதாகும். இவைகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

3. மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

அதிகப்படியான மது அருந்துதல் உடலில் திரவ இழப்பை ஏற்படுத்துவதுடன், உள்ளிருந்து நீரிழப்பை உணர வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. இது நச்சுகளின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், நமது முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

4. வறுத்த உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும்

வறுத்த மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. குளிர் காலத்தில் ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிப்பது மிக முக்கியமாகும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி உங்கள் கூந்தலை குளிர்காலத்திலும் பாதுகாப்பாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள முடியும். 

Published at : 18 Nov 2023 12:43 PM (IST) Tags: hair Hair care

தொடர்புடைய செய்திகள்

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Karuveppilai Sadham : செம்மையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.. கருவேப்பிலை சாதம் செஞ்சு இப்படி கலக்குங்க..

Karuveppilai Sadham : செம்மையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.. கருவேப்பிலை சாதம் செஞ்சு இப்படி கலக்குங்க..

Plantain Masala Fry: வீட்டில் பூஜையா? தயிர், சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா வாழை வறுவல்..

Plantain Masala Fry: வீட்டில் பூஜையா? தயிர், சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா வாழை வறுவல்..

டாப் நியூஸ்

 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!

 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!

4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி

4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி

Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்

Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்

Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!

Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!