மேலும் அறிய

பொதுத்துறை வங்கியில் வெல்த் மேனேஜர் வேலை வாய்ப்பு: மிஸ் செய்திடாதீங்க!!!

வெல்த் மேனேஜர் பதவியில் காலியாக உள்ள 250 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கியில் பணி வாய்ப்பை தேடுபவரா நீங்கள்? யூனியன் வங்கியில் வெல்த் மேனேஜர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 250 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்தி கொள்ளவும். தாமதம் செய்ய வேண்டாம்.

யூனியன் வங்கியில் மேனேஜர் வேலை அறிவிப்பு வெளியாகி இருக்கு. சம்பளம் ரூ.93,960 வரை, 250 காலிப்பணியிடங்கள் இருக்குங்க. பொதுத்துறை வங்கியில் வேலை தேடுபவர்களுக்கான சூப்பர் அறிவிப்பை யூனியன் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, வெல்த் மேனேஜர் பதவியில் காலியாக உள்ள 250 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக வரும் 25 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்த் மேனேஜர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகபடியாக ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பிற்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

வெல்த் மேனேஜர்  250

இவை எஸ்சி - 37, எஸ்டி - 18, ஒபிசி - 67, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 25, பொதுப் பிரிவினர் - 103 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் தளர்வு உள்ளது.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 2 ஆண்டு எம்பிஏ, மேனேஜ்மெண்ட் முதுகலை பட்டப்படிப்பு, PGDBA/PGDBM/PGPM/PGDM ஆகிய பிஜி டிப்ளமோ படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும். இப்படிப்புகளை கட்டாயம் 2 வருட முழு நேரப் படிப்பில் முடித்திருக்க வேண்டும். மேலும், NISM/IRDAI/NCFM/AMFI சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதலாக விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 3 வருடம் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

யூனியன் வங்கியில் கிரேடு-2 கீழ் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.64,820 முதல் அதிகபடியாக 93,960 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி, கொடுப்பனைகள் கூடுதலாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் நபர்களை பொறுத்து தேர்வு செய்யப்படும் முறை வங்கியின் மூலம் நிர்ணயிக்கப்படும். ஆன்லைன் தேர்வு/ குழு கலந்துரையாடல், விண்ணப்பங்கள் தெரிவு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். விண்ணப்பதார்கள் குறைவாக இருப்பின் முதல் கட்ட தெரிவு முறையாக ஆன்லைன் தேர்வு பின்பற்றப்பட்டு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். மிகக்குறைவாக இருப்பின் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு 150 கேள்விகள் கொண்டு 225 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும். சென்னை, கோயம்புத்துர், திருச்சி, விருதுநகர், மதுரை, ஈரோடு, சேலம், நெல்லை, தஞ்சாவூரில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்கணும்

யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.unionbankofindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்டி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.177 செலுத்தினால் போதும். விண்ணப்பப் பதிவு மேற்கொண்டு கட்டணத்தை செலுத்திய பின்னர், புகைப்படம், கையொப்பம், கைரேகை, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசி தேதி ஆகும். எனவே காலதாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். யூனியன் வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமும், கல்வித்தகுதி உடையவர்கள் உடனே ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான அட்மிட் கார்டு மற்றும் இதர விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

 

தலைப்பு செய்திகள்

படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget