மேலும் அறிய

Job Alert: வேலை வேண்டுமா? டி.என்.பி.எல். முதல் பாடி டி.வி.எஸ். நிறுவனம் வரை.. இந்த வேலைவாய்ப்புகளுக்கு உடனே விண்ணப்பிங்க!

Job Alert: இந்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்பு விவரம் குறித்து காணலாம்.

இந்த வார இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் விவரம் குறித்து காணலாம்.

டி.என்.பி.எல் நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Tamil Nadu Newsprint and Papers Limited) இருக்கும் வேலை வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

டி.என்.பி.எல். (தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்திற்கான  தகுதிகள் என்னென்ன என்று கீழே காண்போம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 10 -ம் தேதி கடைசி ஆகும். 

பணி விவரம்

துணை மேலாளர் 

கல்வித் தகுதி

இதற்கு விண்ணப்பிக்க  B.E. / B.Tech சிவில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது 26 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்

விண்ணப்பதாரர்கள் 46 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணி இடம்

கரூர்

ஊதிய விவரம்

இந்த பணிக்கு மாத ஊதியமாக ரூ.2.39 லட்சம் வழங்கப்படும். மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. திறன் அடிப்படையில் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

 www.tnpl.com/careers - என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள சுய விவர குறிப்பு வடிவத்தின் படி அஞ்சல் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் - 10/01/2023

அஞ்சல் முகவரி:

GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, 
KARUR DISTRICT, TAMIL NADU. 

https://tnpl-13685.b-cdn.net/wp-content/uploads/2023/12/TNPL_DGM-Civil-Advt-27122023.pdf -- என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காணலாம். 

ஊர வளர்ச்சி துறையில் வேலை

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

அலுவலக உதவியாளர் 

இரவுக் காவலர் 

கல்வித் தகுதி 

அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இரவுக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 - ரூ.50,000/-

இரவுக்காவலர் -  ரூ. 15,700 - ரூ.50,000/- ( திருவாடானை, மண்டபம்)

விண்ணப்பிக்கும் முறை:

  • இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய விவர குறிப்பு, தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச் சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த விண்ணப்பதாரர்களுக்கு வட்டாட்சியரிடம் பெற்ற சான்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். 

திருவாடானை பகுதியிலுள்ள பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.01.2024 தேதி மாலை 5.45 மணிக்குள் 

மண்டபம் பகுதியிலுள்ள பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.01.2023 மாலை 5.45 மணிக்குள்

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/12/2023120775.pdf / https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/12/2023121473.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர்

ஊராட்சி ஒன்றியம்,

திருவாடானை.

இராமநாதபுரம் - 623 407 

*

ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர்

ஊராட்சி ஒன்றியம்,

மண்டபம் (இ) உச்சிப்புளி 

இராமநாதபுரம் - 623 534 

மகளிருக்கான வேலைவாய்ப்பு

சென்னை, பாடியிலுள்ள லூகாஸ் டி.வி,எஸ்.  நிறுவனத்தின் உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

பாடி லூகாஸ் கிளைக்கு கலை மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு உற்பத்தி பிரிவில் பயிற்சி பணியாளர்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

தொழிற்சாலையில் இருந்து 10கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உதவித்தொகை

இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சி பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ப மாஹம் ரூ.15,000 முதல் ரூ.16,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

PF, ESI, Canteen, சீருடை, பாதுகாப்பு ஷூ, மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவை செய்து தரப்படும். 

விருப்பமுள்ளவர்கள் நேர்காணலுக்கு, அனைத்து சான்றிதழ்களுடன் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் கார்டு நகல்கள் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

லூகாஸ் டி.வி.எஸ். லிமிடெட்,

பாடி, 

சென்னை - 600 050

தொடர்புக்கு - 7358105162 / 9003585772 

12.01.2024 வரை நேர்காணலுக்கு செல்லலாம்.

இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் வேலை 

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assitant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர மேலாளர் பணிக்கும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். https://krishnagiri.nic.in/ta/ - என்ற இணையதள முகவரில் மேலதிக விவரங்களை காணலாம்.

பணி விவரம் 

உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் (Assitant Cum Data Entry operator)

  • 12-ம் வகுப்பு தேர்ச்சி . அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் கணினி பட்டயப்படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். 
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (உயர்நிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது. ரூ.11,916 மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 

99,100 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம்,

கிருஷ்ணகிரி - 635 115 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.01.2024

https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2023/12/2023121983.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். ச்

IIITDM வேலைவாய்ப்பு

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்துட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (Indian Institute of Information Technology, Design and Manufacturing) பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி 

கல்வித் தகுதி 

பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி பணிக்கு B.E./B.Tech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மனிதவள மேலாண்லை, மார்க்கெட்டிங் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி பணிக்கு மாத ஊதியமாக ரூ.75,000 வழங்கப்படும்.

ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdf3Q3edMUdsvaJVK3SGz8mQHsye4IX1NnyThPe1UPLCKyJ7g/closedform - என்ற கூகுள் ஃபாமில் தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். 2024 ஜனவரி மாதம் 4-வது வாரத்தில் நேர்காணல் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை

https://www.iiitdm.ac.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். தேவையானவற்றை பூர்த்தி செய்து  மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். 

மின்னஞ்சல் முகவரி -  recruit@iiitdm.ac.in

தொடர்பு எண்: 044-27476300/ 6313

அதிகாரப்பூர்வ வலைதள முகவரி - www.iiitdm.ac.in

அறிவிப்பின் முழு விவரத்தை (Engagement of Training and Placement Officer) http://old.iiitdm.ac.in/img/Recruitment/2023/Notice%20for%20Training%20and%20placement%20officer%20%2020%20Dec%202023.pdf -  என்ற லிங்கில் காணலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.01.2024


 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
Embed widget