தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் புதிது புதிதாக வேலைகளும் பணியிடங்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகியவாறே உள்ளது.
இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் வெளியான வேலைவாய்ப்பு குறித்த விவரங்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- A (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இணைய வழி மூலம் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். நவம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
ஊதியம், தேர்வு, விண்ணப்பிக்கும் முறை குறித்து முழுமையாக அறிய: இதை க்ளிக் செய்யுங்கள்
தமிழக சுகாதாரத் துறையில் வேலை
தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 47 பிஸியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் எம்ஆர்பி தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பிஸியோதெரபிஸ்ட் கிரேடு 2 பிரிவில் 47 காலியிடங்கள் உள்ளன. இதில், 46 புதிய காலி இடங்களும் 1 பழைய இடமும் உள்ளன.
இதற்கு அக்டோபர் 18ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்க அவகாசம் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பது, கல்வித் தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம் ஆகியவை குறித்து விரிவாகக் காண: இதை க்ளிக் செய்யுங்கள்
சமூக நலத்துறையில் வேலை
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், "மகளிர் உதவி எண் 181" சென்னையில் செயல்பட்டு வருகிறது.
மகளிர் உதவி எண் 181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள அழைப்பு ஏற்பாளர், பல்துறை பணியாளர், இரவுநேரப் பாதுகாவலர் என மொத்தம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் http://tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கையைப் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல https://tnsocialwelfare.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலமும் விண்ணப்பிக்கலாம். இதற்கு நவம்பர் 11 கடைசித் தேதி ஆகும்.
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் வேலை
தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் (தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்ரேஷன் லிமிடெட்- Tamil Nadu Fibrenet Corporation Limited) பாரத்நெட் திட்டம் 2 ( BharatNet Phase- II) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிறுவன செயலாளர் மற்றும் ஆலோசகர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நேர்காணல் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முழு விவரங்களுக்கு: இங்கே க்ளிக் செய்யுங்கள்