முதல்வர் மருந்தகம் Mudhalavar Marundhagam


தமிழக அரசின் அறிவிப்பின்படி, இந்தத் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு, மூன்று லட்சம் ரூபாய் மானியமும் தமிழக அரசால் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.


நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான மருந்துகள் நீண்ட நாட்களுக்கு தொடர வேண்டியுள்ளதால், பயனாளர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், ”முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.


விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் 


D.Pharm / B.Pharm கல்வித்தகுதி உடைய தொழில்முனைவோர் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் போர்டல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தொழில்முனைவோர் சான்றிதழ் வைத்திருப்பவராக இல்லாவிட்டால், D.Pharm / B.Pharm சான்றிதழை வைத்திருக்கும் தனிநபரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 


மருந்து உரிமம் பெற்ற கூட்டுறவு சங்கங்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவை.


ஆன்லைன் போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்க சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் கட்டாய தேவை ஆகும். விண்ணப்பதாரருக்கு அனைத்து தகவல் தொடர்புகளும் செய்திகளும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும்.


‘முதல்வர் மருந்தகம்‘ எனும் பதாகையின்கீழ் மருந்தகம் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் நடத்தப்படும் எனும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே மானிய தொகை வழங்கப்படுகிறது. எனவே, முதல்வர் மருந்தகம் செயல்படும் கட்டடம் செயல்படும் காலம் வரை வேறு எந்த ஒரு நோக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.


தேவையான ஆவணங்களின் பட்டியல்களை கள அலுவலரின் ஆய்வுக்கு அளித்திட


1) B.Pharm/D.Pharm மருந்தகம் உரிமம் வைத்திருப்பவரின் ஒப்புதல் கடிதம்.


2) கவுன்சில் பதிவு


3) மருந்தகம் கவுன்சில்


4) மருந்து விற்பனை உரிமம்


5) சில்லறை விற்பனை உரிமம்


6) FSSAI சான்றிதழ்


7) உரிமை / வாடகை ஒப்பந்த ஆவணங்கள்


8) சொத்து வரி / தண்ணீர் வரி / EB பில்


9) ஜிஎஸ்டி


10) பான் கார்டு


11) ஆதார் அட்டை


12) வங்கி பாஸ்புக்


13) கட்டட வாடகைக்கான உரிமையாளரின் ஒப்புதல் கடிதம்


14) விண்ணப்பதாரர்கள் ஆதரவற்ற விதவை /எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்கள்.


15) மருந்து உரிம சான்றிதழ்.