Intelligence Bureau Recruitment: உளவுத்துறை பணியகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு பணியகத்தில் 3,000 பணியிடங்கள்:

புலனாய்வுப் பணியகம் (IB) உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO), கிரேட் 2 நிர்வாக ஆட்சேர்ப்பு 2025க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி முடிவடைகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mha.gov.in ஐ அணுகி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆகஸ்ட் 10, 2025 நிலவரப்படி விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 27 ஆண்டுகள் வரையில் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு பொருந்தும்.

இடஒதுக்கீடு அடிப்படையில் காலிப்பணியிடங்கள்:

  • பொதுப் பிரிவினர் -  1,537
  • பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS): 442
  • பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி): 946
  • பட்டியல் சமூகத்தினர் (SC): 566
  • பட்டியல் பழங்குடியினர் (ST): 226

தேர்வு முறை

  • எழுத்து தேர்வு (அப்ஜெக்டிவ் டைப்)
  • விளக்கத் தேர்வு
  • நேர்காணல்
  • ஆவண சரிபார்ப்பு
  • மருத்துவ பரிசோதனை

எழுத்துத் தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 100 அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் இருக்கும், இந்த தேர்வினை 1 மணி நேரத்தில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் நெகட்டிவ்  மதிப்பெண்ணாக வழங்கப்படும். விளக்கத் தேர்வு 50 மதிப்பெண்களைக் கொண்டிருக்கும். இறுதியாக 100 மதிப்பெண்கள் மதிப்புள்ள நேர்காணல் நடைபெறும்.

எழுத்து தேர்வுக்கான பாடங்கள்:

  • கரண்ட் அஃபயர்ஸ்: 20 கேள்விகள் - 20 மதிப்பெண்கள்
  • பொது அறிவு: 20 கேள்விகள் - 20 மதிப்பெண்கள்
  • நியூமெரிகல் ஆப்டிட்யூட்: 20 கேள்விகள் - 20 மதிப்பெண்கள்
  • ரீசனிங்: 20 கேள்விகள் - 20 மதிப்பெண்கள்
  • ஆங்கிலம்: 20 கேள்விகள் - 20 மதிப்பெண்கள்

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம் சமூகத்தின் அடிப்படையில் மாறுகிறது. அதன்படி, 

  • பொது, ஓ.பி.சி., ஈ.டபிள்யூ.எஸ்.: ரூ. 650
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள்: 550

விண்ணப்ப போர்ட்டலில் வழங்கப்பட்ட ஆன்லைன் கட்டண நுழைவாயில் மூலம் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

உளவுத்துறை வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

  • உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mha.gov.in ஐ அணுகவும்
  • திரையில் தோன்றும் IB Recruitment என்ற லிங்கை கிளிக் செய்யவும்
  • தேவையான தகவல்களை உள்ளிட்டு ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
  • அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையெழுத்து, தொடர்புடைய சான்றிதழ்களை அப்லோட் செய்யுங்கள்
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்தி சப்மிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்

இதையடுத்து எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணபித்ததற்கு பிறகு வரும் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதுபோக, பணி சேர்ப்பு தொடர்பான புதிய அப்டேட்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அவ்வப்போது பார்வையிடவும் புலனாய்வு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.