தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19-ந் தேதி நடக்கிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பில் பல்வேறு துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேவை உள்ளது. பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமையான பணியாளர்களை தாங்களே தேர்ந்தெடுக்கின்றனர். இதில் தென் மாவட்ட இளைஞர்கள் பலர் வேலைக்காக வெளியூர்களை தேடும் நிலை இருக்கிறது. குறிப்பாக சொல்வது என்றால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட இளைஞர்கள் பலர் வெளியூர்களில் வேலை தேடி அலைகிறார்கள். அவர்களை பொறுத்தவரை நல்ல ஊதியம், பணி பாதுகாப்பு போன்றவற்றை எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் சொந்த மாவட்டங்களில் போதிய வேலைவாய்ப்புகள் இருப்பது இல்லை.

இதனால் வெளியூர்களில் வேலை தேடி வருகிறார்கள். அதேநேரம் உள்ளூர்களிலும் அவ்வப்போது நல்ல வேவைவாய்ப்பு சிலருக்கு கிடைக்கிறது. அப்படியான வாய்ப்பு தூத்துக்குடியை தேடி வருகிறது. தூத்துக்குடியில் வரும்19-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் "TamilNaduPrivate Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் வேலைநாடுநர்கள் (JOB SEEKERS) எனில் CANDIDATE LOGIN-ல் பதிவு செய்து கொள்ளலாம். அந்த முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும், வேலைநாடுநர்களின் வேலை வாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுநிலைபட்டதாரி, என்ஜினீயரிங், டிப்ளமோ, நர்சிங், ஐ.டி.ஐ படித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.