ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊதியம் எவ்வளவு?

இதற்கு குறைந்தபட்ச தகுதியாக 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பாக, 42 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாத வருமானம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு முறை

  • மெரிட் பட்டியல்
  • நேர்காணல்

விண்ணப்பிப்பது எப்படி?

https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, எந்தெந்த தாலுக்காவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிந்து அதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பவானி தாலுக்கா, பெருந்துறை, கோபிச்செட்டி பாளையம், மொடக்குறிச்சி, கொடுமுடி, ஈரோடு, தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், அந்தியூர் தாலுக்காக்களில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

     1. கல்விச் சான்று நகல் (10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ்)

  1. சாதிச்சான்று நகல்
  2. இருப்பிடச் சான்று நகல்
  3. ஆதார் அட்டை நகல்
  4. வாக்காளர் அடையாள அட்டை நகல்
  5. குடும்ப அட்டை நகல்
  6. முன்னுரிமை கோருபவராயின் அதற்கான சான்று நகல்
  7. ஓட்டுநர் உரிமை இருப்பின் அதன் நகல்
  8. வேலை வாய்ப்பு பதிவு அட்டை இருப்பின் அதன் நகல்

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2025/07/2025070799.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்.

கூடுதல் தகவல்களுக்கு:  https://erode.nic.in/