TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!

தமிழக சுகாதாரத் துறையில் பிஸியோதெரபிஸ்ட் அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதியாக இருந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 47 பிஸியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் எம்ஆர்பி தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பிஸியோதெரபிஸ்ட் கிரேடு 2 பிரிவில் 47 காலியிடங்கள் உள்ளன. இதில், 46 புதிய காலி இடங்களும் 1 பழைய இடமும் உள்ளன.

Continues below advertisement

இதற்கு அக்டோபர் 18ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்க இன்று (நவம்பர் 7) கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிக்க அவகாசம் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது, கல்வித் தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம் ஆகியவை குறித்து விரிவாகக் காணலாம். 

கல்வித் தகுதி 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பிஸியோதெரபிஸ்ட் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?

பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  எஸ்சி, எஸ்சி அருந்ததியின பிரிவுக்கு 59 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பிரிவுக்கு 42 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000. 
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500

ஊதியம் எவ்வளவு?

15ஆம் நிலையின்படி, பிஸியோதெரபிஸ்ட் பணிகளுக்கு ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

 * தேர்வர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும். 

*அதில், https://tnmrbphy24.onlineregistrationform.org/MRB/LoginAction_input.action என்ற இணைப்பை க்ளிக் செய்து, லாகின் செய்ய வேண்டும்.  

* ஏற்கெனவே முன்பதிவு செய்யாதவர்கள், https://tnmrbphy24.onlineregistrationform.org/MRB/instructions.jsp என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். 

* அல்லது https://tnmrbphy24.onlineregistrationform.org/MRB/instructions2.jsp என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

முக்கிய இணைய முகவரிகள் இதோ

பிஸியோதெரபிஸ்ட் பணிக்கான பாடத் திட்டத்தை https://tnmrbphy24.onlineregistrationform.org/MRBDOC/Syllabus.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, பெறலாம்.

வேலை குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண:https://mrb.tn.gov.in/pdf/2024/Physiotherapist_Gr_II_181024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

இ- மெயில் முகவரி: mrb2024@onlineregistrationform.org

தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு: 022 62507738 (திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரை)

தகுதி குறித்த சந்தேகங்களுக்கு: 044 24355757 (திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை)

கூடுதல் தகவல்களுக்குhttps://mrb.tn.gov.in/

Continues below advertisement
Sponsored Links by Taboola