மேலும் அறிய

அரசுத் தேர்வாணையத்தில் வேலை; செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்! எல்லா விவரங்களும் இங்கே..

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பி.எல் முடித்திருக்க வேண்டும், பார் கவுன்சிலில்  உறுப்பினராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Public Prosecutor ஆக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே சட்டம் முடித்தவர்களாக இருந்தால் வருகின்ற செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தமிழகத்தில் பல்வேறுத் துறைகளின் கீழ் பணிபுரிவதற்கான நபர்களை முறையான போட்டித்தேர்வின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கும் பணிகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டுவருகிறது. அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் தேர்ச்சிபெறும் இளைஞர்களுக்கு இங்கு தான் நேர்காணல் நடைபெற்று வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Public Prosecutor-ஆக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான கல்வி தகுதி என்ன? எந்த வயதுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்? என இங்கு தெரிந்துகொள்வோம்.

அரசுத் தேர்வாணையத்தில் வேலை; செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்! எல்லா விவரங்களும் இங்கே..

Assistant Public Prosecutor பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான தகுதிகள்:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பி.எல் பட்டம் முடித்திருக்க வேண்டும் எனவும் பார் கவுன்சிலில்  உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் இத்தகைய தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனில் அவர்களுக்கான வயது அதிகபட்சம் 34-க்குள் இருக்க வேண்டும் என வேலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இது தொடர்பான விபரங்களை https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். இதோடு  ஆகஸ்ட் 25-ஆம் தேதிமுதல்  செப்டம்பர் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

அரசுத் தேர்வாணையத்தில் வேலை; செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்! எல்லா விவரங்களும் இங்கே..

மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற  நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

எழுத்துத்தேர்வில் தேர்வாகும் நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதனையடுத்து இதில் தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Public Prosecutor பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு ரூ56100 - 177500/- வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டம் முடித்து வேலை தேடுபவர்களாக இருந்தால், மறக்காமல் தமிழக அரசின் Assistant Public Prosecutor பணிக்கு விண்ணப்பிக்குமாறு வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget