மேலும் அறிய

ஊடகத்துறையில் சாதிக்க வேண்டுமா..? லயோலாவில் கட்டணமில்லா சான்றிதழ் படிப்பு..! விண்ணப்பிக்க நாளையே கடைசி..

லயோலா கல்லூரியில் கட்டணமில்லா சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும்.

Certificate Program in Applied Journalismதமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து கட்டணமில்லா ஊடகவியல் சான்றிதழ் படிப்பினை அறிமுகம் செய்துள்ளது. ஆறு மாத கால இந்த கட்டணமில்லா பயிற்சியில் இணைவதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

பயிற்சி நடைபெறும் இடம்:

லயோலா கல்லூரி, சென்னை

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கல்வித் தகுதி:

எதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பு தேறியவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த சான்றிதழ் படிப்பில் சேர முடியும். 6 மாத கால பயிற்சி படிப்பாக இது கற்பிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரம்:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் (தன்னாட்சி) இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும்வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஊடகத்துறையின் முன்னோடிகளால் மாணவர்கள் நேரடியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

தமிழ் இதழியல் உலகில் வளர்ந்து வரும் புதிய துறைகளில் ஆழ்ந்த அலசலுடன் எழுத வல்ல இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத்திருக்கிறது. 

ஊடகவியலுக்குத் தேவையான வலுவான அடிப்படைத் திறன்களை இந்தப் படிப்பு தருகிறது. கோட்பாடுகளையும் களப்பயிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கிறது.

கட்டணமில்லா இந்தப் படிப்பில், வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. திறன்மிக்க ஊடகவியலாளர்கள் தொடர்ந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய ஊடகப் பிரிவைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படுவார்கள். பொருளாதாரம் மற்றும் நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் பண்பாடு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளை மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எழுத்து, ஒளிப்படம், வீடியோ, வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம், திறன்பேசி, ட்ரோன் இதழியல் உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளில் தக்க துறைசார் நிபுணர்கள் வழியாக மாணவர்கள் திறன்களைப் பெறுவார்கள். கடந்த இரு நூற்றாண்டுகளாக தமிழ்ச் சமூகம் மக்களாட்சிக்கும் தற்சார்பு இதழியலுக்குமான  சூழலை உருவாக்கிப் பேணி வளர்ப்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். முன்னோடிச் சமூகத்தின் மரபில், பன்முக இதழியல் கல்வி அனுபவத்துடன் ஊடகப் பணிகளுக்கு ஆயத்தமாவார்கள்.

பயிற்சி விவரம்:

இந்த பயிற்சி திட்டத்திற்கு தேர்வாகிறவர்கள் வாரம் ஐந்து நாள்கள் (திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தினசரி வகுப்புகளுக்கு வர வேண்டும். 

ஊடகவியல் சான்றிதழ் படிப்பைப் பற்றி மேலும் அறிய: https://www.loyolacollege.edu/CAJ/home

ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க: https://live.loyolacollege.edu/loyolavocationaleduonline/application/loginManager/youLogin.jsp

என்ற லிங்கி மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21, 2022.

ஆல் தி பெஸ்ட் மக்களே! இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget