Job Alert:தமிழ்நாடு வனத்துறையில் வேலை;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
Job Alert: கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் துணை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
தமிழ்நாடு வனத்துறையில் கீழ் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் துணை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
தொழில்நுட்ப உதவியாளர்
Data Entry Operator
கல்வித் தகுதி:
- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. Forestry / Agriculture அல்லது எம்.எஸ்.சி., Wildlife Biology / Life Sciences / உயிரியியல் / விலங்கியல் / Natural Sciences அல்லது இந்தப் படிப்புகளுக்கு இணையான பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Data Entry operator பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை படிப்பு அல்லது கம்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- MIS / GIS பிரிவில் எம்.சி.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆய்வு செய்வதில் இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு அரசு விதிகளின் படி, ஒப்பந்த பணிக்கான ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஒப்பந்தம் அடிப்படையிலான பணியிடங்களுக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
துணை வனப்பாதுகாவலர் அலுவலகம்,
வன மரபியல் கோட்டம், எண்,2 பாரதி பார்க் ரோடு,
கோயம்புத்தூர் - 641 043
தொடர்பு எண் - 0422 - 2434791
விண்ணப்பிக்க கடைசி நாள் - 14.07.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1rYiPVJUGxm-MnRqz4avunqm9DR3G_58w/preview- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
**********
UPSC Recruitment 2023: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC – Union Public Service Commission) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
- Air Worthiness Officer
- Air Safety Officer
- Livestock Officer
- Junior Scientific Officer (Ballistics)
- Junior Scientific Officer (Biology)
- Junior Scientific Officer (Chemistry)
- Junior Scientific Officer (Physics)
- Public Prosecutor
- Junior Translation Officer
- Assistant Engineer Grade-I
- Assistant Survey Officer
- Principal Officer (Engineering)
- Senior Lecturer (General Medicine)
- Senior Lecturer (General Surgery)
- Senior Lecturer (Tuberculosis & Respiratory Diseases)
தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 261 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள Air Worthiness Officer, Livestock Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர். மத்திய ஆயுஷ் அமைச்சகம், விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது.