மேலும் அறிய

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் தற்காலிகப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் இளைஞர் நீதிக்குழுமத்தின் தற்காலிகக் கூடுதல் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, இரண்டு முக்கியப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நலன் மற்றும் இளைஞர் நீதிக்குழுமத்தின் செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் நோக்கில் இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை எழுத்தர் பணியிடம் ஒன்றும், அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்றும் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்களையும் கல்வித் தகுதிகளையும் வெளியிட்டுள்ள மாவட்ட நிர்வாகம், தகுதியுள்ள நபர்கள் உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கல்வி மற்றும் பணிசார்ந்த இதரத் தகுதிகள்

இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகளைப் பொறுத்தவரை, இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை எழுத்தர் (Junior Assistant cum Record Clerk) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வில் அல்லது அதற்கு இணையான தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் அடிப்படை கணினி இயக்கத் திறனும், கணினி சார்ந்த பணி அனுபவமும் பெற்றிருப்பது அவசியமான ஒன்றாகும். இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் தொகுப்பூதியமாக இருபதாயிரம் ரூபாய் (ரூ. 20,000/-) வழங்கப்படும்.

அதேபோல், அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது தனியார் பள்ளி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு (VIII Standard) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதத் தொகுப்பூதியமாக பதிமூன்றாயிரம் ரூபாய் (ரூ. 13,000/-) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் வயதானது 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாகும்.

பணி நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்

மேற்கண்ட இரண்டு பணியிடங்களுமே முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானவை என்பதால், தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் வருங்காலத்தில் எந்தவித நிரந்தரப் பணி உரிமையையும் கோர முடியாது. மேலும் நிர்வாகக் காரணங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில், முன்னறிவிப்பு ஏதுமின்றி பணியாளர்களைப் பணியில் இருந்து விடுவிப்பதற்கான முழு அதிகாரமும் மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில், அதுதொடர்பாக எவ்வித சட்டப்பூர்வ உரிமைகோரலையோ அல்லது இழப்பீட்டையோ பணியாளர்கள் கோர முடியாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த ஆள்சேர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான இதர ஆவணங்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட (Self-Attested) நகல்களை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 12-10-2026 அன்று மாலை 05:30 மணி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-ஆம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை மாவட்டம் - 609 305" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

குறிப்பிட்ட கடைசி நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள், அரைகுறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மற்றும் உரிய சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் காலக்கெடுவுக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இ வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Embed widget