மேலும் அறிய

CISF Recruitment 2024: இன்னும் 2 நாள்தான்; பிளஸ் 2 போதும்- மத்திய அரசில் 1130 காலி இடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?

CISF Fireman Recruitment 2024: சிஐஎஸ்எஃப் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.cisfrectt.in என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட  ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1,130 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (செப்.30) கடைசித் தேதி ஆகும்.

பணி விவரம்: ஃபயர்மேன் கான்ஸ்டபிள் (Constable - Fireman)

மொத்த பணியிடங்கள்: 1130

பணி இட விவரம்:

தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஹரியானா, புது டெல்லி, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், பீகார், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மணிப்பூர், திரிபுரா,  தெலங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மண்டல வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி

அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் +2  வகுப்பு அல்லது பணியிடத்திற்கு தேவையான தகுதி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டியது அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ளவும்.


CISF Recruitment 2024: +2 தேர்ச்சி போதும்; 1130 பணியிடங்கள்! சி.ஐ.எஸ்.எஃப்.-இல் பணி; விவரம்!
 

ஊதியம் எவ்வளவு?

 5-வது லெவல் ஊதிய வரைவின்படி  ரூ. 21,700 முதல் 69,100 வரை வரை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ’allowances’ வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும். மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.  எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உடல்தகுதித் தேர்வு (physical efficiency test):

CISF Recruitment 2024: +2 தேர்ச்சி போதும்; 1130 பணியிடங்கள்! சி.ஐ.எஸ்.எஃப்.-இல் பணி; விவரம்!

 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் பொது அறிவு, ஆப்டிடியூட் கணிதம் உள்ளிட்டவைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். வினா தாள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CISF Recruitment 2024: +2 தேர்ச்சி போதும்; 1130 பணியிடங்கள்! சி.ஐ.எஸ்.எஃப்.-இல் பணி; விவரம்!

 

விண்ணப்பிப்பது எப்படி? 

சிஐஎஸ்எஃப் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.cisfrectt.in என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட  ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2024 (இரவு 23.00 மணி வரை)

இது தொடர்பாக கூடுதல் விவரங்கள், விண்ணப்ப படிவம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://tamilanguide.in/wp-content/uploads/2024/08/CISF-Constable-Fire-Official-Notification-PDFs.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
TNPSC Group 4: “கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவி!” - குரூப் 4 பணியிட அறிவிப்பை விளாசிய டிடிவி தினகரன்
TNPSC Group 4: “கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவி!” - குரூப் 4 பணியிட அறிவிப்பை விளாசிய டிடிவி தினகரன்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Embed widget