மேலும் அறிய

பெங்களூரு BHEL-ல் 610 வேலைவாய்ப்பு! பொறியியல் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் ஆகியவற்றில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு (BE/B.Tech/B.Sc) ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

பெங்களூருவில் இயங்கி வரும் பெல் நிறுவனத்தில் 610 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு. உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெங்களூரு வளாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையில் 610 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ப்பட உள்ளன. இதில் 488 காலிப்பணியிடங்கள் பெங்களூரிலும், 122 காலிப்பணியிடங்கள் தேசிய அளவிலும் நிரப்பப்படுகிறது.

பொறியியல் டிரெய்னி -  610

இதில் எலெக்ட்ரிக்கல் - 301, மெக்கானிக்கல் - 186, எலெக்ட்ரிக்கல் - 79, கணினி அறிவியல் - 44 என நிரப்பப்படுகிறது. இவை பொதுப்பிரிவு - 247, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் - 61, ஒபிசி - 165, எஸ்சி - 81, எஸ்டி - 46 என இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.

பொறியியல் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அதிகபடியாக 28 வயதைக் கடந்திருக்கக்கூடாது. ஒபிசி 3 ஆண்டுகள் வரையும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும் தளர்வு வழங்கப்படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் ஆகியவற்றில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு (BE/B.Tech/B.Sc) ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். அந்தந்த முதன்மை பொறியியல் பிரிவிற்கு சம்மந்தமான பாடப்பிரிவுகளில் பொறியியல் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். முதல் ஆண்டு மாதம் ரூ.30 ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ,.35,000, மூன்றாம் ஆண்டு ரூ.40,000 என சம்பளம் வழங்கப்படும். இவையில்லாமல் வருடத்திற்கு ரூ.12,000 மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளுக்கு வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதி அடைவார்கள். விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் விடுக்கப்படும். எழுத்துத் தேர்வு 85 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் நடத்தப்படும். தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இதில் 0.25 நெகட்டிங் மதிப்பெண்கள் உள்ளன. தேர்வு பெங்களூரில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.

https://bel-india.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு கட்டணமாக ரூ.177 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு உள்ளது. கடந்த செப்டம்பர் 24-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. வரும்  அக்.7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதம் தேர்வு நடைபெறும். 

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 24.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.10.2025
எழுத்துத் தேர்வு அக்டோபர் 25 மற்றும் 26ம் தேதி

விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். எனவே காலதாமதம் செய்யாமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.

தலைப்பு செய்திகள்

மாதம் ₹27,000+ சம்பளத்தில் அரசு வேலை! செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிரடி அறிவிப்பு - முழு விபரம் உள்ளே!
மாதம் ₹27,000+ சம்பளத்தில் அரசு வேலை! செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிரடி அறிவிப்பு - முழு விபரம் உள்ளே!
அரசு வேலைக்கு காத்திருக்கிறீர்களா? கொச்சின் ஷிப்யார்டில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
அரசு வேலைக்கு காத்திருக்கிறீர்களா? கொச்சின் ஷிப்யார்டில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
சென்னை கீழ்பாக்கம் மனநல நிறுவனத்தில் 27 வேலைகள்: 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை வாய்ப்பு!
சென்னை கீழ்பாக்கம் மனநல நிறுவனத்தில் 27 வேலைகள்: 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை வாய்ப்பு!
உங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!
உங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
Renault Kwid: நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
Embed widget