Job Alert: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றவரா? ரூ.1.12 லட்சம் மாத ஊதியம்; விண்ணப்பிக்க நாளையே கடைசி!
AICTE Recruitment: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (AICTE) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (AICTE) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி குறித்த முழு விவரம்
- Accountant/Office Superintendent cum Accountant
- ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் - இந்தி மொழி
- உதவியாளர்
- Data Entry Operator – Grade III
- Lower Division Clerk
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- கணக்காளர் மற்றும் அலுவலக மேற்பார்வையாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடிட்டிங் உள்ளிட்ட பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இந்தியின் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்தியில் இருந்து ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பதில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
- பொது மேலாண்மை / அக்கவுண்ட்ஸ் பணியில் ஆறு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Data Entry Operator – Grade III பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்யூட்டர் அப்ளிகேசனில் டிப்ளமோ படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
- Lower Division Clerk பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Accountant/Office Superintendent cum Accountant - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400
- Junior Hindi Translator - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400
- Assistant - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400
- Data Entry Operator – Grade III - Pay Matrix Level 2 ரூ,19,900- 63,200
- Lower Division Clerk - Pay Matrix Level 2 ரூ.19,900- 63,200
தேர்வு செய்யப்படுவது எப்படி?
எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்:
தமிழ்நாட்டில் சென்னையில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ https://www.aicte-india.org/-இணையதளத்தை காணவும்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க ரூ.1000 விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பெண்கள் ஆகியோருக்கு ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். முன்னாள் இராணுவ துறையினருக்கு விண்ணப்பம் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
https://recruitment.nta.nic.in/AICTERecruitment/File/ViewFile?FileId=1&LangId=P - என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி -15.05.2023
ஆன்லைன் விண்ணப்பிக்க https://recruitment.nta.nic.in/AICTERecruitment/Page/Page?PageId=1&LangId= ---என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
https://examinationservices.nic.in/RecSys23/root/home.aspxenc=WPJ5WSCVWOMNiXoyyomJgPFR0UqSrt3KQtGobJonLkM5K9MVJ53XE3hLmsTsJOEO -- என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு அறிவிப்பினை தெரிந்து கொள்ளவும்.