மேலும் அறிய

முதல் செக்ஸ்.. ஆரம்பகால செக்ஸ்.. இதையெல்லாம் கண்டிப்பா நோட் பண்ணிக்கோங்க..

முதல் செக்ஸ் மறக்கமுடியாததாக இருக்கவேண்டும் என்றால் முந்திரி பாதாம் சாப்பிட வேண்டும் என்பதோடு தமிழ் சினிமாக்கள் முடித்துக்கொள்ளும்.ஆனால் உண்மையில் அது மட்டுமே போதுமானது அல்ல.

முதல் முத்தம்..முதல் செக்ஸ்...இவை எதுவுமே வாழ்க்கையில் மறக்கமுடியாதது என்பார்கள். மறக்க முடியாத அளவுக்கு இருக்க பார்ட்னரும் அதற்கு ஏற்றபடி அமைய வேண்டும். முதல் செக்ஸ் மறக்கமுடியாததாக இருக்கவேண்டும் என்றால் முந்திரி பாதாம் சாப்பிட வேண்டும் என்பதோடு தமிழ் சினிமாக்கள் முடித்துக்கொள்ளும்.ஆனால் உண்மையில் அது மட்டுமே போதுமானது அல்ல. செக்ஸ் குறித்த தயக்கம் பயமும் வேண்டுமானால் சினிமாவில் வரும் அப்பாவி கேரக்டர்களுக்கு அழகாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற குறைந்தபட்ச ஆர்வமாவது இல்லையெனில் ஒரு கட்டத்துக்கு மேல் உங்கள் பார்ட்னருடனான உறவில் விரிசல் விழக்கூட வாய்ப்பிருக்கிறது. முதல்முறை செக்ஸுக்குத் தயாராபவர்கள் குறைந்தபட்சம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வது நல்லது.

எது கிளர்ச்சி தருகிறது?

உங்கள் உடலில் எங்கே உங்களைத் தொட்டால் கிளர்ச்சி அடைவீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். சுய இன்பம் அதற்கான வழி. செக்ஸுக்கு முன்பு சுய இன்பம் செய்வதைப் பரிந்துரைக்கின்றனர் பெரும்பாலான பாலியல் நிபுணர்கள். 

ஆமை வேகம் நல்லது!

ஓட்டப்பந்தயத்தில்தான் முயல் பாய்ச்சலில் இருக்க வேண்டுமே ஒழிய செக்ஸில் ஆமை போல மெதுவாகச் செயல்பட்டாலே நல்லது. மெதுவாகச் செயல்படுவதால் ஆர்காஸம் அடைவதும் அதிகமாக ஏற்படும்.

உங்கள் பார்ட்னருக்கு எப்படி?

செக்ஸ் தொடங்குவதற்கு முன்பு எப்படி உங்கள் பார்ட்னரிடம் ஒப்புதல் கேட்க வேண்டுமோ செக்ஸின்போதும் அதே போல கேட்டுப் பழகுங்கள். அவருக்கு ஓகேவாக இருக்கிறதா? நிறுத்தவேண்டுமா? தொடரலாமா? என்பது போன்ற கேள்விகளை அவ்வப்போது கேளுங்கள். 


லூப் உங்கள் பெஸ்ட் பிரெண்ட்

நீர் அல்லது சிலிக்கோனாலான லூப்களை பயன்படுத்துவது உங்களது காண்டமை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும். பொதுவாக லூப்களை பயன்படுத்துவது உங்கள் பிறப்புறுப்பில் இறுக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். 

வலிக்குமா? 

முதல்முறை செக்ஸ் என்றாலே கொள்ளிவாய் பிசாசைப் பார்த்தது போன்று அச்சம் கொள்ள வைக்கும் விஷயமாக சினிமாக்கள் காண்பித்துள்ளன. முதல்முறை செக்ஸ் வலிக்கும் என்பது சினிமா கற்றுக்கொடுத்த மற்றுமொரு பொய். செக்ஸ் விநோதமானதாக இருக்கும்,சிலருக்கு நகைச்சுவையானதாக முடியும், சிலருக்கு சங்கடமானதாகவும் சிக்கலானதாகவும் இருக்கும். ஆனால் வலியெல்லாம் இருக்காது.அதையும் மீறி வலி குறித்த பயம் இருந்தால் உங்கள் பார்ட்னருடன் பேசுங்கள். 

ரத்தம் வருமா?

முதல் செக்ஸின் போது ரத்தம் வெளியேறும் என்பது பொதுவான நம்பிக்கை.ஆனால் முதல் செக்ஸிலேயே ரத்தம் வெளியேறவேண்டும் என்பது இல்லை. ஹைமன் என்பது மிக மெல்லிய சதை, நீங்கள் அதிகம் உடல் உழைப்பில் ஈடுபடுபவர் என்றால் சாதாரணமாக கால்களை அகற்றும்போது கூட அவைக் கிழிய வாய்ப்பு உண்டு. அதனால் முதல் செக்ஸின்போது ரத்தம் வராமல் போனால் பதட்டம் அடைய வேண்டாம். ரத்தம் வெளியேறினாலும் பயப்பட வேண்டாம். 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

தினமும் 7 முட்டைகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும்?.. ஆய்வில் நடந்த அதிர்ச்சி தகவல்!
தினமும் 7 முட்டைகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும்?.. ஆய்வில் நடந்த அதிர்ச்சி தகவல்!
Health Tips: உங்களுக்கு ஒரு காது கேட்காது என்பதை கண்டறிவது எப்படி? - சிம்பிள் டிப்ஸ் இதோ!
Health Tips: உங்களுக்கு ஒரு காது கேட்காது என்பதை கண்டறிவது எப்படி? - சிம்பிள் டிப்ஸ் இதோ!
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget