மேலும் அறிய

Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட் இதோ!

Anna Serial: அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மடியில் படுத்து கொண்டு அம்மாவாக நினைத்து சத்தியம் கேட்க பரணியும் சத்தியம் செய்ய வந்த நேரத்தில் கையை கீழே போட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மறுநாள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் ஷண்முகம் கத்திக்குத்து நடந்த இடத்தை தொட்டு பார்த்து வலியை உணர்ந்து கையில் வேல் எடுத்து கொண்டு முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டியை குத்த கிளம்புகிறான், எல்லோரும் தூங்கி கொண்டிருக்க ஷண்முகம் யாருக்கும் தெரியாமல் வெளியே வரும் போது கனியின் காலை மிதிக்க அவள் கத்த எல்லாரும் எழுந்து கொள்கின்றனர்.

இதனை தொடர்ந்து ஷண்முகம் வேலுடன் இருப்பதை பார்த்து எல்லாருக்கும் சந்தேகம் வர ஷண்முகம் சும்மா வெளிய போயிட்டு வரேன் என்று சொல்கிறான். பரணி நீ எங்க போறேன்னு தெரியும் அதெல்லாம் போக வேண்டாம் என்று சொல்ல என்ன உன் அண்ணனை காப்பாற்ற பாக்குறியா என்று கேட்க பரணியும் ஆமாம் என்று சொல்லி வேலை பிடிங்கி கொண்டு உள்ளே சென்று விட மற்றவர்கள் அவ உன்மேல நிறைய பாசம் வச்சிருக்கா என்று சொல்கின்றனர்.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

இருந்தாலும் ஷண்முகம் ஆவேசமாக பேசி கொண்டிருக்க இசக்கி நீ வீரனு எங்களுக்கு தெரியும் முதல்ல இந்த டீயை குடி என ஆப் செய்து விடுகிறாள். அடுத்ததாக சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி, பாண்டியம்மா ஆகியோர் ஒன்று பெண்ணை பார்த்து கல்யாணம் முடிவு செய்கின்றனர். பாண்டியம்மா எப்படியாவது அந்த சண்முகத்தை நம்ப வைத்து குடும்பத்தோடு கல்யாணத்துக்கு வர வைக்கணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதுக்கு பாக்கியத்தை நம்ப வைத்தாள் போதும் என சொல்லி வீட்டிற்கு வந்து தனது கழுத்தில் கத்தியை வைத்து முத்துபாண்டியை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க பாக்கியமும் நம்பி விடுகிறாள்.

உடனே பாக்கியம் வைகுண்டம் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை சொல்ல எல்லாரும் சந்தோசப்பட ஷ்ணமுகத்திற்கு மட்டும் ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது, இதே நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணி மூன்று குழந்தைகளுடன் இருக்கும் போது யாரோ ஒருவர் ஒரு குழந்தையை தூக்கிட்டு போற மாதிரி கனவு கண்டு அலண்டு எழுகிறாள். அதே போல் ஷண்முகம் தூங்கி கொண்டிருக்கும் போது சூடாமணி கனவில் வந்து ஷண்முகம் அம்மா வந்திருக்கேன் கதவை திறடா என்று சொல்வது போல் இருக்க ஓடி வந்து கதவை திறக்க யாரும் இல்லாமல் இருக்கின்றனர்.

வீட்ல எல்லாரும் என்னாச்சு என்று கேட்க ஷண்முகம் அனைவரையும் சமாளித்து விட்டு சூடாமணியை பார்க்க வர அவள் மூன்று தங்கச்சிகளையும் பத்திரமாக பாத்துக்க எனக்கு என்னமோ தப்பா தோணுது என்று சொல்ல வீட்டிற்கு வரும் ஷண்முகம் ஸ்கூல், காலேஜ் என வெளியே கிளம்பும் தங்கைகளை எங்கேயும் போக கூடாது என தடுத்து நிறுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

தலைப்பு செய்திகள்

DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Tiago Vs Grand i10 Nios: டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
Tata Sumo Next Generation: புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Embed widget