மேலும் அறிய

Divya Spandana: ‘திவ்யா ஸ்பந்தனா நல்லாதான் இருக்காங்க; அவங்களுக்கு ஒன்னும் இல்ல’ - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தோழி

நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக வெளியான செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக வெளியான செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது. 

பொதுவாக சினிமா, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருக்கும் பிரபலங்கள் குறித்து வதந்திகள் பரவுவது வழக்கம். குறிப்பாக உயிரோடு, நலமுடன் இருக்கும் போதே இறந்து விட்டார்கள், அந்த நோய் பாதிப்பு உள்ளது என பரப்பப்படும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை தரும். இப்படியான சம்பவங்கள் தங்களை மன ரீதியாக எப்படி பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்களே வந்து சொன்னாலும் பொய் தகவல் பரப்பும் சிலர் கேட்பதில்லை. சமூக வலைத்தளங்களில் தாக்கங்கள் பெருகி விட்ட நிலையில் இத்தகைய போலியாக தகவல்கள் சர்வ சாதாரணமாக பரபரப்படுகிறது. 

இப்படியான நிலையில் இன்றைய தினம் (செப்டம்பர் 6) நடிகை திவ்யா ஸ்பந்தனா மரணமடைந்ததாக தகவல் வெளியானது. கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா, தமிழில் 2004 ஆம் ஆண்டு சிம்பு நடித்த குத்து படத்தில் திவ்யா என்ற பெயரில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் “குத்து” ரம்யா என்ற பெயரில் அழைக்கப்பட்டார். தொடர்ந்து அர்ஜூனுடன் கிரி, தனுஷ் நடித்த பொல்லாதவன், ஷாம் நடித்த தூண்டில், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், ஜீவா நடித்த சிங்கம் புலி  உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். 

அதேசமயம் கன்னடத்தில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்த திவ்யா ஸ்பந்தனா, கர்நாடகாவின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவில் பேத்தியாவார். 2012 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸில் சேர்ந்த திவ்யா 2013 ஆம் ஆண்டு மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் திவ்யா ஸ்பந்தனா, இன்று திடீரென மாரடைப்பால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. உடனடியாக பலரும் அதிர்ச்சியில் இரங்கலை தெரிவிக்க தொடங்கினர். அதேசமயம் இது உண்மையா? பொய்யா? என தெரியாமல் பலரும் குழம்பி தவித்தனர். இப்படியான நிலையில் திவ்யாவின் தோழியும் ஊடகவியலாளருமான சித்ரா சுப்ரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளை வெளியிட்டிருந்தார். 

அதில் முதல் பதிவில், “மிகவும் திறமையான பெண்மணியான திவ்யா ஸ்பந்தனாவினுடான இரவு உணவு சந்திப்பு அற்புதமானது. பெங்களூர் மீதான காதல் உட்பட பல விஷயங்களைப் பேசினோம்” என தெரிவித்திருந்தார்.  இந்த பதிவானது திவ்யா உயிரிழந்து விட்டதாக தகவல் பரவிய நேரத்தில் பதிவிடப்பட்டது. தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில், ‘நான் திவ்யா ஸ்பந்தனாவிடம் பேசினேன். அவர் நலமாக இருக்கிறார். நாளை பெங்களூர் திரும்ப உள்ளார்’ என ட்வீட் செய்திருந்தார். இதன்மூலம் திவ்யா இறந்துவிட்டதாக வெளியான போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget