கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார்(Puneeth Rajkumar) உடல்நல குறைவு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

Continues below advertisement

அவரது மறைவையடுத்து திரைத்துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் நடிகை த்ரிஷா புனீத் ராஜ்குமாரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,  “நான் இதை ஏற்க மறுக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். புனீத் ராஜ்குமாருடன் த்ரிஷா பவர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Continues below advertisement

முன்னதாக, புனீத்தின் உடல் நிலை குறித்து விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், நடிகர் புனீத் குமார் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. மருத்துவமனைக்குக் கொண்டுவரும்போதே அவரது நிலைமை மோசமாக இருந்தது என தெரிவித்திருந்தார்.

புனீத் ராஜ்குமார் மரணத்துக்கு அவரது ரசிகர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்துகின்றனர். மேலு ம், எடியூரப்பா, தேவகவுடா போன்ற அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். உடல்நலம்  மீது தீவிர கவனத்துடன் இருந்த புனீத் ராஜ்குமாரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Puneeth Rajkumar Profile : மக்களின் அன்புக்குரிய ’அப்பு’ என்னும் ’புனீத் ராஜ்குமார்’.. யார் இவர்?

Rajinikanth Health Update | ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை என்ன? விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிறாரா? : மருத்துவமனை விளக்கம்..

Puneeth Rajkumar Passed Away | பிரபல நடிகர் புனீத் ராஜ்குமார் காலமானார்..!

Bigg Boss 5 Tamil Promo: ‛எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு... ஓவரா...’ - தாமரையை தாளிக்கும் ராஜூ!

Rajinikanth Health Status | மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதி... மகள் ஐஷ்வர்யா தனுஷ் வருகை..!