தனியார் பள்ளி முதல்வர் ஒரு குழந்தையை பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கீழே தொங்கும் புகைப்படம் மற்றும் ஏராளமான குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தசம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அரங்கேறியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பிரவீன் குமார் லக்ஸ்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதல்வர் மீது புகார் அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை அஹ்ராராவில் மாவட்டத்தில் உள்ள சத்பவ்னா ஷிக்ஷன் சன்ஸ்தான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. அந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சோனு யாதவ், சாப்பிடும்போது குறும்பு செய்துள்ளார். இதனால், கோபமடைந்த பள்ளி முதல்வர் மனோஜ் விஸ்வகர்மா, மற்ற மாணவர்கள் முன்னிலையில் பாடம் நடத்துவதற்காக குழந்தையின் ஒரு காலை பிடித்து பள்ளி கட்டிடத்தின் முதல் மாடி பால்கனியில் தொங்கவிட்டார்.
விஸ்வகர்மா கதறிக் கதறி மன்னிப்புக் கேட்ட பிறகே குழந்தையை மேலே இழுத்தார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியானது.
Watch Video: ரொனால்டோ பாணியில் கோகோ-கோலாவை ஓரங்கட்டிய வார்னர் -வைரல் வீடியோ உள்ளே...!
இது குறித்து சோனுவின் தந்தை ரஞ்சித் யாதவ் கூறுகையில், "என் மகன் மற்ற குழந்தைகளுடன் கோல்கப்பா சாப்பிட மட்டும் சென்றிருந்தான். அவன் கொஞ்சம் குறும்புத்தனமாக நடந்து கொண்டான். இதற்காகவே, எனது மகனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் முதல்வர் இதுபோன்ற தண்டனையை அளித்துள்ளார்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து மனோஜ் விஸ்வகர்மாவும் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், தவறுதலாக குழந்தை வராண்டாவில் தொங்கியது என்றும் கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இருப்பினும், தந்தையின் புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்