கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார்(Puneeth Rajkumar) உடல்நல குறைவு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 46. 



முன்னதாக, புனீத்தின் உடல் நிலை குறித்து விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலின்படி, நடிகர் புனீத் குமார் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. மருத்துவமனைக்குக் கொண்டுவரும்போதே அவரது நிலைமை மோசமாக இருந்ததார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது எனக் கூறியிருந்தார்.



கடைசியாக புனீத் நடிப்பில் சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் யுவரத்னா என்ற திரைப்படம் வெளியானது. ஏப்ரல் 1, 2021ல் இத்திரைப்படம் வெளியானது. இதில் சாயிஷா, தனஞ்சய் ஆகியோர் நடித்திருந்தினர். இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ஜேம்ஸ், த்வித்வா ஆகியன திரைக்கு வரவிருக்கின்றன. இந்நிலையில் தான் புனீத் ராஜ்குமார் திடீரென உயிரிழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மருத்துவமனை குவிந்த ரசிகர்கள்:


புனீத் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியானது தெரிந்து பெங்களூரூ விக்ரம் மருத்துவமனை முன்னாள் பெருமளவில் அவரது ரசிகர்கள் திரண்டனர். அங்கே போலீஸார் குவிக்கப்பட்டனர். ரசிகர்களால் அப்பு என்று அன்புடன் அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் உடல் நலம் தேற வேண்டி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.


மேலும் படிக்க..