Puneeth Rajkumar Profile : மக்களின் அன்புக்குரிய ’அப்பு’ என்னும் ’புனீத் ராஜ்குமார்’.. யார் இவர்?

கன்னட திரையுலகின் பவர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் புனித்ராஜ்குமார் காலமானார்

Continues below advertisement

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்தவர் ராஜ்குமார். தமிழில் எம்.ஜி.ஆர்., தெலுங்கில் என்.டி.ஆர்.,ஐப் போன்று கன்னட மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் ராஜ்குமார். அவரது இரண்டாவது மகன்தான் புனித்ராஜ்குமார். மூத்த மகன் சிவராஜ்குமாரைப் போலவே, இவரும் கன்னட திரையுலகில் நடிகர் ஆவார். கன்னட திரையுலகின் பவர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவிற்கு இவருக்கென்று மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நல்ல கட்டுக்கோப்பான ஆரோக்கியமான புனித்ராஜ்குமார் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்

Continues below advertisement


ராஜ்குமார்- பர்வதம்மா தம்பதியினருக்கு கடந்த 1975ம் ஆண்டு பிறந்தவர். புனித்ராஜ்குமார் மூன்றாவது மகனாக பிறந்தார். இவருக்கு ராகவேந்திர ராஜ்குமார், சிவராஜ்குமார், பூர்ணிமா என உடன்பிறந்தவர்கள் உள்ளனர். கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன்பே கடந்த 1999ம் ஆண்டு அஸ்வினி ரேவந்த் என்பவரை புனித்ராஜ்குமார் திருமணம் செய்தார். அவருக்கு வந்திதா மற்றும் த்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக தனது ஒரு வயது முதல் பல படங்களில் தனது தந்தையுடனும் மற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரங்களாக 1986-ஆம் ஆண்டு வரை பல படங்களில் நடித்த புனித்ராஜ்குமார் கடந்த 2002ம் ஆண்டு அப்பு என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக கன்னட திரையுலகில் அறிமுகமானார்.


அந்தபடம் மாபெரும் வெற்றி பெற்றதால், அவரை ரசிகர்கள் செல்லமாக அப்பு என்று அழைத்தனர். தொடர்ந்து அபி, வீர கன்னடிகா, மௌரியா, ஆகாஷ், நம்ம பசவா, அஜய் ஆகிய படங்களில் நடித்தார். 2007ம் ஆண்டு வெளியான அரசு படம் இவரது புகழை மேலும் உயர்த்தியது. இந்த படத்தில் நடித்ததற்காக கன்னட திரையுலகின் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அதே ஆண்டு வெளியான மிலானா என்ற படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் நடித்ததற்காக கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான சுவர்ணபிலிம் விருது பெற்றுள்ளார். தொடர்ந்து பிந்தாஸ், வம்சி, ராஜ் என்று வெற்றிப்படங்களை அளித்தார். இதில், வம்சி மற்றும் ராஜ் படத்தில் நடித்ததற்காக சவுத்ஸ்கோப் அவார்டை பெற்றுள்ளா். ஜாக்கி படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் சிறந்த நடிகருக்கான உதயாபிலிம் விருதையும், குடுகாரு படம் மாபெரும் வெற்றியுடன் கன்னட திரையுலகின் சிறந்த நடிகருக்கான சைமா விருதையும்  பெற்றுத்தந்தது.

2012ம் ஆண்டு அவர் நடித்த அண்ணாபாண்ட், யாரே கூகதளி, பவர், ராணா விக்ரம், தூட்மனே குட்கா படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. 2017ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ராஜகுமாரா படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக லவ்லவிகே ரிடர்ஸ் சாய்சின் சிறந்த நடிகருக்கான விருது, ஜீ கன்னடாவின் ஹேமய்யா கன்னடிகா விருது, பிலிம்பேரின் சிறந்த நடிகருக்கான விருது, கன்னட திரையுலகின் சிறந்த நடிகருக்கான சைமா விருதுகளை குவித்தது.


மைத்ரி என்ற படத்தில் புனித்ராஜ்குமாராவுவும், ஹம்பிள் பொலிடிசியன் நோகராஜ், மாயபஜார், பட்டே ஹூளி படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக ஏப்ரல் 1-ந் தேதி யுவரத்னா என்ற படம் வெளியானது. தற்போது அவரது நடிப்பில் ஜேம்ஸ் மற்றும் த்வித்வா என்ற இரு படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக மட்டுமின்றி கவலுதாரி, மாயாபஜார் 2016, லா, ப்ரெஞ்ச் ப்ரியாணி, பேமிலி பேக், ஒன்கட் டூ கட் ஆன் ப்ளாவர் ஸ் கம் என்ற படங்களை தயாரித்துள்ளார். இதில் கடைசி இரு படங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளது.

கன்னட திரையுலகில் பிரபலமான கன்னட கோட்யதிபதி நிகழ்ச்சியை 2012-ஆம் ஆண்டு தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றுள்ளார். உதயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெட்ரவதி தொடரை இவர்தான் தயாரித்துள்ளார்.

மேலும் படிக்க:

Continues below advertisement