நடிகர் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் உறுப்புகள் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, ரஜினிக்கு நரம்பியல் மற்றும் இருதய நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருவதாக தகவல் வெளியானது. ஏற்கெனவே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ள நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.
இதற்கிடையே, ரெகுலர் மாஸ்டர் செக்கப்பிற்காகவே காவிரி மருத்துவமனைக்கு ரஜினி வந்திருக்கிறார் என ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தகவல் கூறினார்.
மேலும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினிகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு Caroteid Artery Revascularization என்னும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவந்தனர்.
அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையிலிருந்து இன்னும் சில நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அவர் அண்ணாத்த படத்தை தனது குடும்பத்தினருடன் பார்த்ததாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் இந்திய சினிமாவின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் அவர் பெற்றிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajinikanth Health: ரஜினிக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு..? - மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை!
Puneeth Rajkumar Passed Away | பிரபல நடிகர் புனீத் ராஜ்குமார் காலமானார்..!
Puneeth Rajkumar Profile : மக்களின் அன்புக்குரிய ’அப்பு’ என்னும் ’புனீத் ராஜ்குமார்’.. யார் இவர்?