யூடியூபில் பெரிய ஸ்டாராக மாற்றுகிறேன் எனக் கூறி 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்

உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவர் யூடியூபில் காமெடி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.  கிட்டத்தட்ட 4 வருடங்களாக இந்த வேலையை அவர் செய்து வந்துள்ளார். அவருக்கு நிசாமுதீன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.  பாலி பகுதியில் வசித்து வரும் நிசாமுதீன் அந்த சிறுமியிடம் நெருக்கமாக பழகி யூடியூபில் பெரிய ஸ்டாராக மாற்றுவதாகவும் அதன் மூலம் நிறைய பணம் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.  

Actor soori | ரயில் செட்டில் ராம்... ஆளே மாறிப்போன நிவின்.. அப்டேட் கொடுத்த சூரி!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த புகார் : தமிழக பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணி மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் இணையதளம் மூலமாக விபச்சாரம்: புரோக்கர் கைது; 4 பெண்கள் மீட்பு

அதற்காக ஜோத்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுமியை அழைத்த நிசாமுதீன் அங்கு ஒரு வீடியோ ஷூட் செய்யலாம் என கூறியுள்ளார். அங்கு சிறுமியை அழைத்த அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை மிரட்டியதால் சில நாட்கள் இதுகுறித்து வாய்திறக்காமல் இருந்துள்ளார். ஆனால் நெருங்கிய தோழியிடம் இது குறித்து கூறவே இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. பின்னர் சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நிசாமுதீனை கைது செய்தனர்.

 அதேபோல் அகமதாபாத்தில் அறிவியல் ஆசிரியர் ஒருவன் தன்னிடம் படித்த மாணவி ஒருவரை 3 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  அதனை வீடியோவாக எடுத்து மாணவியை மிரட்டியும் வந்துள்ளார். இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கையில் இறங்கிய போலீசார் குஜராத்தில் ஆசிரியரை கைது செய்தது.

Upcoming movies: ஊரடங்கு தளர்வுகள்.. விரைவில் 100% இருக்கைகள்? தியேட்டர் ரிலீசுக்கு வரிசை கட்டும் திரைப்படங்கள்!

முகம் தெரியல.. தழும்பு தெரியுது! ஆபாச தளத்தில் காதலியுடன் இருந்த அந்தரங்க வீடியோ! இளைஞர் ஷாக்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண