பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில்  ஒருவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கங்கனா பாஜகவின் ஆதரவாளரும்கூட.


பாஜகவின் ஆதரவாளர் என்று கூறப்பட்டாலும் கங்கனா தனது மனதில் தோன்றியதை முன் வைப்பவர். தற்போது அவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்துள்ளார்.


 






இதற்கிடையே, கனடாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 




இதனால் அங்கு நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாதுகாப்பு கருதி குடும்பத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கனடா பிரதமர் ட்ரூடோ இந்திய எதிர்ப்பாளர்களை ஊக்குவித்தார். இப்போது அவரது நாட்டில் அவர் சந்திக்கும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரகசிய இடத்தில் மறைந்துள்ளார். எதிர்ப்பாளர்கள் அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். கர்மா திருப்பி தாக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.




முன்னதாக, வேளாண்சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம்வரை, டெல்லியில் விவசாயிகள் ஒற்றுமையாக போராடினர். கிட்டத்தட்ட ஒரு வருடம் நடந்த அந்தப் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.


அந்தவகையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும். போராட்டச் சூழல் கவலையளிக்கிறது என்று கூறியிருந்தார்.




ஜஸ்டின் ட்ரூடோவின் அந்தக் கருத்துக்கு இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கனடா நாட்டு தூதருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Budget 2022 Pros & Cons: மத்திய பட்ஜெட் - இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரின் கருத்து என்ன?