சென்னையில் உள்ள பல முக்கிய ஹோட்டல்கள் மற்றும் சில அபார்ட்மெண்ட் குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ரஞ்சித் என்பவர் போலீசாருக்கு அளித்த தகவலில் சென்னை, தி.நகரில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலில் வெளிமாநில பெண்கள் மற்றும் நுங்கம்பாக்கத்தில் வெளிமாநில பெண் தங்கவைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

  


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தி.நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கே விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதற்காக 3 வெளிமாநில பெண்கள் தங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். அதேபோல, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் ஒரு வெளிமாநில பெண் தங்கவைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. அந்த பெண்ணையும் போலீசார் மீட்டனர். பின்னர், இந்த நான்கு வெளிமாநில பெண்களும் அரசினர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.





முன்னதாக, சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.


இந்த நிலையில், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் கடந்த 29-ந் தேதி சென்னையை அடுத்த தாழம்பூரில் வசித்து வந்த ரஞ்சித் என்பவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் விபச்சார தடுப்பு பிரிவில் பதியப்பட்டுள்ள 5 பாலியல் குற்றம் தொடர்புடைய வழக்குகளில் இவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.





ரஞ்சித் பல்வேறு புனைபெயர்களுடன் சமூக வலைதளம் மூலமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.  ரஞ்சித் அளித்த தகவலின் அடிப்படையில் பெண்கள் நான்கு பேரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்த பின்னர், ரஞ்சித்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னையில் நுங்கம்பாக்கம், தி.நகர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பேருந்து நிலையங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : Crime | குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரம்.. மகன் கண்முன்னே தாயை கொன்ற கொடூர தந்தை..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண