நடிப்பு சூறாவளி எஸ்.ஜே.சூர்யாவால் எகிறிய கலெக்‌ஷன்.. மார்க் ஆண்டனி முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?


நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி படம் நேற்று (செப்டம்பர் 15) உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, ஒய்.ஜி.மகேந்திரன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க


ஜூனியர் NTR முதல் மிருணாள் தாக்கூர் வரை... சைமா (SIIMA) விருதுகளை தட்டிய தூக்கிய பிரபலங்கள்..!


2023 ஆண்டிற்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023) அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விழா நேற்று (செப்டம்பர் 15) மற்றும் இன்று (செப்டம்பர் 16) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. சைமா (SIIMA Awards 2023) எனப்படும்  தென்னிந்திய சர்வதேச திரைப்படம் விருது விழா நிகழ்ச்சி வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. தென்னிந்திய திரைக் கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நடப்பாண்டுடன் 11 ஆண்டுகளை கடந்துள்ளது. மேலும் படிக்க


9 நாளில் ரூ.735 கோடி வசூல்.. ஆஸ்திரேலியாவிலும் சாதனை... பாக்ஸ் ஆஃபீஸை புரட்டிப்போட்ட ஜவான்!


பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகுமே ஆவலுடன் காத்திருந்தது. மேலும் படிக்க


பொன்னியின் செல்வன் முதல் கே.ஜி.எஃப் வரை.. ஜெயிலர் நாயகன் விநாயகன் நடிக்க மறுத்த படங்கள்!


பொன்னியின் செல்வன், கே.ஜி.எஃப் , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தும் அதை மறுத்துள்ளார் ஜெயிலர் திரைப்படத்தில் வர்மனாக நடித்து அசத்திய பிரபல நடிகர் விநாயகன். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஷிவராஜ்குமார், மோகன்லால் என பல நடிகர்கள் நடித்திருந்தாலும் படத்தில் வில்லன் வர்மனாக நடித்திருந்த விநாயகனின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருந்தது. மேலும் படிக்க


‘இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்’ .. மார்க் ஆண்டனி படம் வெற்றி குறித்து வீடியோ வெளியிட்ட விஷால்..!


மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். மேலும் படிக்க


மகளின் லால் சலாம் படத்தில் இத்தனை கோடிகளை சம்பளமாக கேட்ட ரஜினி..!


தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிக்கு வழங்க இருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரம்யாகிருஷ்ணன், மோகன் லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என பலரும் நடித்திருக்கும் ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரி குவித்து வருகிறது. மேலும் படிக்க