Lal Salaam Rajinikanth: தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிக்கு வழங்க இருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரம்யாகிருஷ்ணன், மோகன் லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என பலரும் நடித்திருக்கும் ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரி குவித்து வருகிறது.


ஜெயிலர் படத்திற்கு இடையே தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி நடித்து இருந்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக ரஜினி நடித்த போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதில் இஸ்லாமியராக அவர் நடித்திருந்த காட்சிகள் திருவண்ணாமலை மற்றும் மும்பையிலும், ஒரு நாள் சென்னையிலும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


ஏற்கெனவே ஷீட்டிங் பணிகள் முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட பணியாக டப்பிங்கில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் லால் சலாம் படத்தில்  நடிப்பதற்காக ரஜினி கேட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக ரூ.40 கோடியை சம்பளமாக ரஜினி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 






ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 20 நிமிட காட்சிகளில் மட்டுமே வரும் அளவுக்கு சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார். படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.


லால் சலாம் படத்தைத் தொடர்ந்து தனது 171வது படத்தில் லோகேஷ் கனகராஜூடன் ரஜினி இணைந்துள்ளார். படத்தை தயாரிக்க உள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது படம் குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ், இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு சண்டைப்பயிற்சி செய்கிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Baakiyalakshmi: லைசென்ஸை திருடிய கோபி... பரிதாப நிலையில் பாக்கியா... பாக்கியலட்சுமியில் பரபரப்பு!


Actor Vinayakan: சனாதனம் விவகாரம்.. உதயநிதிக்கு நடிகர் விநாயகன் ஆதரவு.. என்ன சொன்னார் பாருங்க..!