2023 ஆண்டிற்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023) அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விழா நேற்று (செப்டம்பர் 15) மற்றும் இன்று (செப்டம்பர் 16) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. 


சைமா விருதுகள் (SIIMA Awards 2023)






சைமா (SIIMA Awards 2023) எனப்படும்  தென்னிந்திய சர்வதேச திரைப்படம் விருது விழா நிகழ்ச்சி வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. தென்னிந்திய திரைக் கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நடப்பாண்டுடன் 11 ஆண்டுகளை கடந்துள்ளது. 11வது சைமா விருது விழா நேற்று செப்டம்பர் 15 ஆம் தேதி துபாயில் தொடங்கி செப்டம்பர் 16 ஆம் தேதியான இன்றும் நடைபெறுகிறது. பல்வேறு தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த  நிகழ்ச்சியின் முதல் நாளில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியவர்கள் கெளரவிக்கப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.


சிறந்த நடிகருக்கான விருது






சிறந்த தெலுங்கு நடிகருக்கான விருதை ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர் வென்றார்.


அதே நேரத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் சிறந்த கதாநாயகிக்கான (விமர்சகர்கள் தேர்வு) விருதையும் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் வென்றார்.






பிற விருதுகள்


தெலுங்கில் சிறந்த இயக்குநருக்கன விருதை ஆர்.ஆர், ஆர் படத்திற்காக எஸ். எஸ் ராஜமெளலியும். சிறந்த திரைப்படத்திற்கான விருது சீதா ராமம் படத்திற்கும் வழங்கப்பட்டது.


கன்னடத்தில் சிறந்த நடிகர்






அதே போல் கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான விருது தேசிய விருது வென்ற 777 சார்லி திரைப்படத்திற்கும், காந்தாரா திரைப்படத்தில்  நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.