விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!


விஞ்ஞானியான சிரஞ்சீவி,(செல்வராகவன்) தொலைபேசி டைம் ட்ராவல் கருவியை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு போன் பேசி எதிர்காலத்தை மாற்ற முடியும். இந்த கருவி, 1975களில் கேங்ஸ்டர்களாக வலம் வரும் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) மற்றும் ஆண்டனி (விஷால்) ஆகிய இருவரையும், ஜாக்கியின் மகனான மதன் பாண்டியனையும், ஆண்டனியின் மகனான மார்க் ஆண்டனியின் வாழ்க்கையையும் எப்படி பல்வேறு ட்விஸ்ட்களுக்கு உள்ளாக்குகிறது என்பதே படத்தின் கதை. மேலும் படிக்க


ஒன்று சேரும் பிள்ளைகள்... விஜய்யை தொடர்ந்து எஸ்.சே.சந்திரசேகரை நலம் விசாரித்த புஸ்ஸி ஆனந்த்!


நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில நாள்களுக்கு முன் தனக்கு திடீர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஆடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். தனக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், மருத்துவர் அறிவுரையின் படி ஸ்கேன் செய்ததாகவும், அதில் தனக்கு உடல்நலக் கோளாறு இருப்பதை கண்டறிந்ததாகவும் அதன் பின் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் இந்த ஆடியோவில் எஸ்.ஏ.சி தெரிவித்திருந்தார். மேலும் படிக்க


அட்லீ நம்ப வச்சு ஏமாத்திட்டாரு... ஷாருக்கான் பக்கத்துல ஆட விடல... பிரியாமணி குற்றச்சாட்டு!


ஒட்டுமொத்த திரையுலகத்தினர் மத்தியிலும் மிகவும் பரவலாக பேசப்படும் ஒரு படம் என்றால் அது அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் 'ஜவான்' திரைப்படம் தான். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு சில படங்களே இயக்கியிருந்தாலும் தனது தனித்துமான ஸ்டைலில் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ, 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் படிக்க


நீலாம்பரி முதல் ராஜாமாதா வரை.. எவர்கிரீன் நடிகை ரம்யாகிருஷ்ணன் பிறந்த நாள்..!


படையப்பாவின் நீலாம்பரியாகவும், ராஜமாதா சிவகாமி தேவியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்காத இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், 1983ம் ஆண்டு வெளிவந்த ‘வெள்ளை மனசு’  படத்தில் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைத்துரையில் அறிமுகமானார். மேலும் படிக்க


‘தாயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு...’.. விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!


தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ’ரத்தம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.  ‘தமிழ்ப்படம்’  மற்றும் ‘தமிழ் படம் 2’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அமுதன் அடுத்ததாக விஜய் ஆண்டனியை வைத்து ரத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.  கண்ணன் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன். மேலும் படிக்க