ஒட்டுமொத்த திரையுலகத்தினர் மத்தியிலும் மிகவும் பரவலாக பேசப்படும் ஒரு படம் என்றால் அது அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் 'ஜவான்' திரைப்படம் தான். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு சில படங்களே இயக்கியிருந்தாலும் தனது தனித்துமான ஸ்டைலில் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ, 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் படத்திலேயே தெறிக்க விடும் ஒரு கதையை கொடுத்து பாலிவுட் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
வசூல் வேட்டை :
இப்படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்தி திரையுலகில் மிக வேகமாக 300 கோடி வசூல் செய்த படம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'பதான்' திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
கச்சிதமான கதாபாத்திர சித்தரிப்பு :
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜவான் திரைப்படத்தின் ஒரு தனித்துவமான விஷயம் அதில் நடிகர் ஷாருக்கான் மட்டுமின்றி திரைப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களின் கதாபாத்திரமும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. அதற்காக ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றது .
பர்ஃபெக்ட் நடிப்பு :
ஜவான் திரைப்படத்தில் நடித்த தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான பிரியாமணி, லட்சுமி என்ற கதாபாத்திரத்தில், ஷாருக்கானின் நம்பகமான உறுப்பினர்களில் ஒருவராக மிகவும் பர்ஃபெக்டாக நடித்திருந்தார். இந்நிலையில், இயக்குநர் அட்லீ மீது குற்றச்சாட்டு ஒன்றை சமீபத்திய தன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரியாமணி.
ஏமாற்றிய அட்லீ :
ஜவான் திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்னரே மிகவும் வைரலாக பரவி வந்த ஒரு வதந்தி நடிகர் விஜய், ஜவான் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டது. நடிகர் ஷாருக்கானுடன் நடிகர் விஜய்யும் நடிக்க உள்ளார் என்ற செய்தியை அட்லீ தன்னிடம் கூறிய போது பிரியாமணி, விஜய்யுடன் ஒரு சில காட்சிகளை தனக்கு கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டுள்ளார். அதையும் ஒப்புக்கொண்டுள்ளார் அட்லீ.
ஆனால் படப்பிடிப்பின் போது விஜய் படத்தில் நடிக்காதது தெரிந்து ஏமாற்றம் அடைந்ததை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அட்லீ தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்லி கேலி செய்துள்ளார் பிரியாமணி.
ஷோபி மாஸ்டர் மீதும் கோபம் :
அதே போல 'ஜிந்தா பந்தா' பாடலில் ஷாருக்கான் பிரியாமணியை தனக்கு பக்கத்தில் நின்று ஆட சொல்லி கூறியுள்ளார். ஆனால் டான்ஸ் மாஸ்டர் ஷோபி மாஸ்டர் பிரியாமணியை பின்னால் நிறுத்தியது குறித்து வருத்ததுடன் பகிர்ந்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் பிரியா மணி நடிக்கும் போது அவருக்கு நடனம் கற்றுக்கொடுத்துள்ளார் பிரியா மணி. அதனால் தான் தன்னை அருகே நிற்க வைக்க ஷாருக் விரும்பியதாகவும் பின்னால் நின்பதை அவர் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார் பிரியாமணி.