SA Chandrasekhar: பிள்ளைகள் ஒன்று சேர்ந்தால் குடும்பத்துக்கே வலிமை - விஜய்யை தொடர்ந்து எஸ்.ஏ. சியை சந்தித்த புஸ்ஸி!

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து உடல்நலம் தேறி வரும் எஸ்.ஏ.சந்திரசேகரை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

Continues below advertisement

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில நாள்களுக்கு முன் தனக்கு திடீர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி ஆடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

Continues below advertisement

தனக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், மருத்துவர் அறிவுரையின் படி ஸ்கேன் செய்ததாகவும், அதில் தனக்கு உடல்நலக் கோளாறு இருப்பதை கண்டறிந்ததாகவும் அதன் பின் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் இந்த ஆடியோவில் எஸ்.ஏ.சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தளபதி 68 பட பணிகளுக்காக அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் விஜய், சென்னை திரும்பிய கையுடன் தனது தந்தை எஸ்.ஏ.சியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்த ஃபோட்டோ இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் உடல்நலம் தேறி வரும் எஸ்.ஏ.சந்திரசேகரை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் உடன் புஸ்ஸி ஆனந்த் இருக்கும் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் தன்னை புஸ்ஸி ஆனந்த சந்தித்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், “பிள்ளைகள் ஒன்று சேரும் போது பெற்றோருக்கு  மட்டும் அல்ல, மொத்த குடும்பத்துக்கே வலிமை கூடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

 

நேற்று, எஸ்.ஏ.சந்திரசேகரை விஜய் சந்தித்ததைத் தொடர்ந்து இன்று புஸ்ஸி ஆனந்த் சந்திக்கும் இந்தப் புகைப்படம் வெளியாகியிருப்பது விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 விஜய் நடிப்பில் லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் லியோ படத்தின் முதல் பாதியை தான் பார்த்துவிட்டதாகவும், படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் அப்டேட் தந்திருந்தார். 

மேலும் இந்த வாரத்தில் இருந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வரிசையாக வெளியாகும் என்றும் கூறியிருந்தார். த்ரிஷா, மிஸ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி, கௌதம் மேனன், மன்சூர் அலிகான் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்து பான் இந்தியா படமாக வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளை பொன்னியின் செல்வன் பட பாணியில் மேற்கொள்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், அதற்கு முன்னதாக படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாடலான நா ரெடி பாடல், விஜய் சிகரெட் பிடித்ததற்காகவும், குடி பற்றிய வரிகளுக்காகவும் விமர்சனங்களைப் பெற்றாலும், யூட்யூபில் மாஸ் ஹிட் அடித்து விஜய் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola