• Thalaivar 171: எல்சியூவில் இணைகிறாரா ரஜினி... தை மாசத்தில் இருக்கு சம்பவம்... உற்சாகத்தில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள்!


நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் 'தலைவர் 171' படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, தான் என்றென்றும் உச்ச நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தன் அடுத்தடுத்த படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட  பணிகள் நடைபெற்று வருவதாகவும், செப்டெம்பர் 19ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படிக்க 




  • Siren First Look: கத்தியும் கருப்பு சாயாவும்...! மிரட்டலாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் ஜெயம் ரவி! பிறந்தநாளில் செம்ம அப்டேட்!




அண்மையில் ஜெயம்ரவியின் நடிப்பில் வரவுள்ள ’தனி ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தனி ஒருவன் 2 படத்தின் அப்டேட் வெளியானதால் வில்லன் யார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இன்று ஜெயம்ரவி பிறந்த நாளை கொண்டாடுவதை ஒட்டி, அவர் நடிக்கும் சைரன் படத்தின் ஃப்ரீபேஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இதுவரை தான் நடித்திடாத ஒரு வித்யாசமான கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளதை போஸ்டரே கூறுகிறது. மேலும் படிக்க 



  • Jawan Box Office: "இது வெறும் ஆரம்பம்தான்.." வரலாறு காணாத சாதனை படைக்கும் ஜவான்.. ஆனந்தத்தில் அட்லீ..!


தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான அட்லீ பாலிவுட் சினிமாவில் 'ஜவான்' திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ஷாருக்கான், நயன்தாராவிஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகி பாபு, சஞ்சய் தத், பிரியா மணி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான 'ஜவான்' திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி உலகெங்கிலும் 10 ஆயிரத்துக்கும் மேலான திரையரங்குகளில் வெளியானது. மேலும் படிக்க 



  • Kamal Haasan: உயிரின் சுபாவம் ஆனந்தம்... தற்கொலை தடுப்பு தினத்தில் கமல்ஹாசன் விழிப்புணர்வு பதிவு


உலக தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு எத்தனை துன்பங்கள் இருப்பினும் தற்கொலை எண்ணங்களைக் கடந்து வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பு மற்றும்  ஒப்புதலின் பெயரில் சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினத்தை அனுசரிக்கிறது. செயல்களின் வழி நம்பிக்கை என்பதே இந்த அமைப்பின் முக்கியக் கொள்கையாக இருந்து வருகிறது. மேலும் படிக்க 



  • Next Adhi Gunasekaran: இவர்தான் அடுத்த ஆதிகுணசேகரனா? எதிர் நீச்சல் டீம் எடுத்த அதிரடி முடிவு... ரசிகர்கள் ஆதங்கம்..!


சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வரும் தொடர் எதிர் நீச்சல். இயக்குநர் திருச்செல்வம் இயக்கும் இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு நாளுக்குநாள் அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த சீரியல் மாபெரும் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அதன் கதைக்களம் மற்றும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு. அந்த வகையில் எதிர் நீச்சல் சீரியலின் ஹீரோ என்றால் அது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து தான். மேலும் படிக்க