• TN Rain Alert: சில்லென மாறும் தமிழ்நாடு.. அடுத்த 7 நாட்களுக்கு இதே நிலைதான்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  10.09.2023 மற்றும் 11.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  12.09.2023 முதல் 16.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்   லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க 



  • CM MK Stalin: இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..


தமிழ்நாடு அரசு கீழ் இயங்கி வருவது இந்து சமய அறநிலைத்துறை. கோயில் கும்பாபிஷேகங்கள், கோயில் திருவிழாக்கள் ஆகியவை நடத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று இந்து சமய அறநிலைத்துறையின் ஒரு மைல் கல்லாக 1000 வது குடமுழுக்கு விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கேசர்பாபு கலந்துக்கொண்டார். அப்போது இந்த கோயிலுக்கான கும்பாபிஷேக விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் படிக்க



  • CM Stalin: அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜி20 மாநாட்டில் நடந்தது என்ன?


ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு குடியரசு தலைவர் வழங்கிய இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள காவேரி மேசையில் குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட ஜி20 விருந்தில் பங்கேற்றேன் என குறிப்பிட்டுள்ளார். அதோடு புகைப்படத்தையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணைகுடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்,  பிரதமர் மோடி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் படிக்க 



  • Ennum Ezhuthum Scheme: எண்ணும் எழுத்தும் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்; அரசுப்பள்ளி ஆசிரியர் ராஜினாமா!- விவரம்


எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பயிற்சிப் புத்தகங்கள்‌ மூலம்‌ கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் குப்பண்ணன் என்பவர் பணியில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று  வட்டாரக்‌ கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றினால்‌ மாநில அளவில்‌ ஏற்பட்ட கற்றல்‌ இடைவெளியை சரிசெய்ய, 2022 - 2023ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும்‌ திட்டம்‌ நடைமுறைப் படுத்தப்பட்டது. மேலும் படிக்க 



  • Vice Chancellor: ஆளுநரின் தன்னிச்சையான போக்கு உயர் கல்வியை பெருமளவில் பாதிக்கும்; மக்கள் கல்விக் கூட்டியக்கம் வேதனை


தமிழகத்தின் உயர்கல்விப் பரப்பில் அரசியல் நோக்கங்களுக்காக ஆளுநர் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து செயல்படுவது மாநிலத்தின் உயர்கல்வியை பெரும் அளவில் பாதிக்கும் என்று மக்கள் கல்விக் கூட்டியக்கம் கவலை தெரிவித்துள்ளது.  ’’தமிழ்நாடு ஆளுநர் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர் நியமனத்திற்கான தேர்வுக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி ஒருவரையும் இணைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும் படிக்க