நான் ரெடிதான்..! இன்று வெளியாகிறது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான ”லியோ” ட்ரெய்லர்
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் படிக்க
விஷால் அளித்த புகார் மீது அதிரடி நடவடிக்கை: வசமாக சிக்கும் 3 பேர் - சிபிஐ-ன் அடுத்தகட்ட மூவ்!
’மார்க் ஆண்டனி' படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. விஷால் அளித்த புகார் தொடர்பாக, 3 இடைத்தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. மேலும் படிக்க
ரத்தம் உறையும் த்ரில்லர் திரைப்படம்..கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்..5 ஆண்டுகளை கடக்கும் ராட்சசன்..!
இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால் நடிப்பில் வெளியானத் திரைப்படம் இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன.தமிழில் வெளியான சைக்காலஜிக்கல் கிரைம் த்ரில்லர்களில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த ஒரு படமாக ராட்சசன் திரைப்படம் இருக்கிறது. விறுவிறுப்பாக அடுத்த என்ன நடக்கப்போகிறது என்று பார்வையாளர்களை சீட்டின் நுனியில் வைத்திருக்கும் திரைக்கதை முதலிய காரணங்களால் ராட்சசன் திரைப்படத்தை பாராட்ட வைக்கிறது என்றாலும் முக்கியமான சிக்கல் ஒன்று இந்தப் படத்தில் பேசப்படாமல் இருக்கிறது. மேலும் படிக்க
'நடனம், நடிப்பு, இயக்கம்..' மோகன், சத்யராஜை இயக்கிய பெண் இயக்குனர் ஜெயதேவி மறைவு
80களில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் ஜெயதேவி. 1976ம் ஆண்டு தனது 20வது வயதில் தமிழ் சினிமாவில் இதய மலர் படத்தின் மூலம் அறிமுகமானார். நாடக கலைஞராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஜெயதேவி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம், ரஜினியுடன் இணைந்து காயத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் படிக்க
'ஜெய் பீம் ' இயக்குனர் ஞானவேல் படம்; ரஜினியை மறைமுகமாக எதிர்க்கும் வன்னியர் சங்கம்
சூர்யா நடிப்பில் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு, வெளிவந்திருந்த " ஜெய் பீம் " திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பல்வேறு வகைகளில், பலதரப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றிருந்தது. அரசியல் வட்டாரத்திலும் இத்திரைப்படம் பேசப்பட்டது. அதே போன்று இத்திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது. இந்தநிலையில் இத்திரைப்படத்தில் , திட்டமிட்டு , வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியதாக, பல்வேறு வன்னியர் சங்கங்களும், பாமகவும் போர்க்கொடி தூக்கியது. மேலும் படிக்க