முகப்பொலிவு:


முகம்  அழகாகவும், நல்ல பொழிவுடனும் இருக்க வேண்டும் என்று நம்மில் பெரும்பாலானோர் விரும்புகிறோம். ஏனென்றால், பணியிடத்திலும் சரி, பொது வெளியிலும் முகம் பொலிவோடு இருக்கும்பட்சத்தில் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. வேலை, குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டியிருக்கும் நிலையில், முதுமை நம்மை அண்டாமல் இருக்க உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியது.


இதுபோன்ற தோல் பராமரிப்பு என்பது ஆடம்பரமானது என்றும் அதிக பணம் செலவாகும் என தவறான எண்ணம் உள்ளது. ஆனால், எளிதான உணவு முறைகள் மூலமே முகப்பொலிவை பராமரிப்பு மேற்கொள்ளலாம். அப்படி ஒன்று தான் கேரட்.


கேரட்டில் இருக்கும் பயன்கள்:


கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை கண்களுக்கும், சருமத்திற்கும் உதவுகின்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றவும், குடல் புண்கள் வராமலும் தடுக்கும். மேலும், இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது.


அதனால் கேரட் சருமத்திற்கு புதுப் பொலிவைத்தரும். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு அதிலிருந்து அதீத எண்ணெய்யை வெளியேற்றும். சருமத்திற்கு ஒரு புதிய ஒலியை பாய்ச்சும். உங்களின் சருமத்தின் நிறத்தை பளபளக்கச் செய்யும். சருமத்தில் சில நுண்ணுயிரிகள் வளர்வதைத் தடுக்கும். 


தினமும் ஒரு கேரட்:


எண்ணெய் பிசுக்கு மிகுந்த சருமத்திற்கு மட்டுமல்ல வறண்ட சருமத்திற்கும் கூட இது அருமையான தீர்வைத் தரும். கேரட்டில் பொட்டாசியம் உள்ளது. அது சருமத்தின் வறட்சியைப் போக்க உதவும். இது சருமத்தின் உள்ளே இருந்து ஈரப்பதத்தை மீட்டெடுக்கும்.  மேலும், சருமத்திற்கு சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படுவதற்கு இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் கேரட் ஜூஸ் சருமத்திற்கு நல்ல பொலிவு தரும். எனவே, தினமும் ஒரு கேரட்டை சாப்பிட வேண்டும்.


இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் பக்க விளைவுகள் ஏற்படும்.இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கேரட் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. சிலருக்கு கேரட் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், தோல் அலர்ஜி, படை வீக்கம், வயிற்றுப் போக்கு இது போன்ற பிரச்சனை வரும் எனவே கேரட்டை சாப்பிடும்போது மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீரியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.