- தெலுங்கு நடிகரால் பாலியல் தொல்லையா... ஹன்சிகா விளக்கம்..!
தெலுங்கு சினிமாவில் தான் அறிமுகமான போது காஸ்டிங் கவுச் பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும், தன்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும்படி நடிகர் ஒருவர் துரத்தியதாகவும் ஹன்சிகா தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியதற்கு அவர் விளக்கமளித்துள்ளார். “தவறான செய்திகளை பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள், கண்மூடித்தனமாக செய்தி வெளியிடும் முன் உண்மைத் தன்மையை சரிபார்க்கவும்” என ஹன்சிகா கடுமையாக ஊடகங்களை விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
- முதல் முறையாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படும் இந்திய படம்..
மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.முதல் முறையாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படும் இந்தியப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷயம் படத்தில் மோகன்லால், மீனா, கலாபவன்மணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இது மலையாளத்தில் 2 பாகங்களாகவும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு 3 பாகங்களாகவும் உருவானது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- '7 நாட்கள் கடந்து போச்சு’ .. அம்மா இறந்த சோகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்த பவித்ரா லட்சுமி..
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது அம்மா மரணமடைந்த செய்தியை சோகத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். டான்ஸ், மாடல், ஃபேஷன் டிசைனர் என பலதுறைகளிலும் முத்திரை பதித்த பவித்ரா லட்சுமி நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். அவரது தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
'தீராக்காதல்' படத்துக்காக இயக்குநருடன் திருப்பதி மலை ஏறிய ஐஸ்வர்யா ராஜேஷ்...!
அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் படங்களின் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவதா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தீரா காதல்', இந்தத் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்துக்காக திருப்பதி மலைக்கு இயக்குநர் ரோஹினுடன் நடந்து சென்றதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- இன்னும் 20 நாட்கள்தான்.. முடிவுக்கு வரும் 'தங்கலான்' படப்பிடிப்பு...!
'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்களில் முடிவுக்கு வரும் என்று படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் படிக்க