பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகும் படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்குவதால் பட அறிவிப்பு வெளியான நாள் முதல் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வந்தது. பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். 


 



கோலார் பகுதியில் படப்பிடிப்பு: 


கே.ஜி.எஃப். படம் எடுக்கப்பட்ட கோலார் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. 1990 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப். நிலத்தில் இருந்து மக்கள் தங்கத்தை தோண்டி எடுக்கும் மக்களின் கலாச்சாரத்தை பற்றிய படமாக உருவாகியுள்ளது. `


பா. ரஞ்சித் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்:


'தங்கலான்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி திரை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பா. ரஞ்சித் தனது ட்விட்டர் மூலம் "இப்படத்திற்காக நடிகர் விக்ரம் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் ஆறு, ஏழு மாதங்களாக காத்திருந்தார். தனது உடல் அமைப்பு, ஹேர் ஸ்டைல் உள்ளிட்டவையில் எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.


படப்பிடிப்பு முடிந்த ஆறு நாட்களுக்கு பிறகு என்னை அழைத்து உங்களுடைய இயக்கத்தில் நடிப்பது புது அனுபவமாக இருந்தது. உங்களுடைய டைரக்‌ஷன் ஸ்டைல் மிகவும் இன்டர்ஸ்டிங்காக உள்ளது என கூறினார். 105 நாட்கள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. மீதம் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளன. உலக ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் அளவுக்கு சிறப்பான ஒரு நல்ல படமாக 'தங்கலான்' அமையும் என இயக்குநர் பா. ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார். 


 



உற்சாகத்தில் ரசிகர்கள் :


சீயான் விக்ரமின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டர் ஒன்றையும் மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. அந்த மேக்கிங் வீடியோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் காட்சிக்கு தயாராவது, பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது, செட் போடும் பணிகள் உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பு குறித்த இந்த அப்டேட் கேட்ட விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் வில்மிபில் உள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.