• வெளியானது ஜவான் படத்தின் முதல் பாடல் - அனிரூத் இசையில் ’வந்த எடம்’ செம மாஸ்


அட்லி இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியானது.  அனிரூத் இசை அமைக்கும் இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் வெளியாவதை ஒட்டி படத்தின் அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்  படக்குழு இன்று முதல் பாடலை வெளியிட்டுள்ளது.  வந்த எடம் என்ற பெயரில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படிக்க



  •  “ ராஜாதி ராஜா, ராஜ கம்பீர வேட்டையன் ராஜா பராக் பராக்” - வெளியானது ராகவா லாரன்ஸ் போஸ்டர்


ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் வேட்டையன் ராஜாவை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி. ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இப்போது இதன் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ்,கங்கனா ரனாவத்வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இன்று இப்படத்தில் இடம் பெற்றுள்ள வேட்டையன் ராஜா கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டது.மேலும் படிக்க



  • மார்வெல் ரசிகர்களே தயாரா..! லோகி வெப் சீரிஸின் சீசன் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு


மார்வெல் நிறுவனத்தின் லோகி வெப் சீரிஸின் சீசன் இரண்டிற்கான வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தோர் மற்றும் அவெஞ்சர்ஸ் படங்கள் மூலம் பிரபலமான லோகி கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள, வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் வரும் அக்டோபர் 6ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10 விதமான லோகி கதாபாத்திரங்கள் நேரமின்றி அவசர அவசரமாக, மிஸ் மினிட்ஸ் எனப்படும் சிறிய கடிகாரத்திற்குள் ஓடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க



  • கொஞ்சமே கொஞ்சம் வாழுங்க.... முடிவுக்கு வந்த ‘பாலி’ சுற்றுலா...சமந்தா ஹேப்பி அண்ணாச்சி!


நடிகை சமந்தா தனது தோழியுடன் கடந்த சில நாட்களாக பாலி நகரில் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்து வந்தார்.சுற்றுலா முடிவடைந்த நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது அழகான பயணத்தின் காட்சிகளைக் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தாங்களும் கூட டூர் போக விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் சமந்தாவை இப்படி பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் படிக்க



  • வட தமிழக அதிரடி அரசியலா? என்னடா இது ஃபகத் ஃபாசிலுக்கு வந்த சோதனை?! மோகன்ஜி போட்ட ட்வீட்


தமிழகத்தின் மேற்கு மாவட்ட அரசியலை மையமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில்  வடிவேலு. ஃபகத் ஃபாசில் , உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 29-ஆம் தேதி வெளியானத் திரைப்படம் மாமன்னன். இந்தப் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பு அனைவரையும் கவர்ந்திருந்தது.  ஆனால் ஓடிடியில் படம் வெளியான பஹத் சாதிய அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகிறார். இதனிடையே இணையவாசி ஒருவர், ‘ஃபகத் ஃபாசிலை வைத்து வட தமிழகத்தின் அதிரடி அரசியலை வைத்து மோகன் ஜி படம் எடுத்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் நின்னு பேசும் என்று கூற, அதற்கு ஸ்மைலியை இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க